யாருக்கு என்ன இலாகா.. குஷி மோடில் எடப்பாடி பழனிசாமி.. விஜய்யை நம்பும் அதிமுக நிர்வாகிகள்!
சென்னை: சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி கட்டாயம் அதிமுக ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக கூட்டணி வலிமையுடன் இருப்பதோடு, விஜய் அதிக வாக்குகளை பிரித்தால் அது அதிமுகவுக்கு சாதகமாக மாறும் என்றும் அவரின் ஆதரவாளர்களிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த சூழலில், கட்சித் தலைவர்கள் பலரும் தேர்தல் முடிவு தங்களுக்கு சாதகமாக அமையும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா புறப்பட்டுள்ளார். மறுபக்கம் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.

அதேபோல் உள்ளூர் மாவட்ட நிர்வாகிகளையும் சந்தித்து வருகிறார். தவெக அதிகளவில் வாக்குகளை பிரிப்பதால், திமுகவினர் குழப்பத்தில் இருக்கும் சூழலில், எடப்பாடி பழனிசாமி கட்டாயம் அதிமுக ஆட்சி அமையும் என்று நம்புவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக விசாரிக்கையில், சேலம், ஈரோடு, தர்மபுரி, கரூர் உள்ளிட்ட கொங்கு மற்றும் வட மாவட்டங்களில் அதிமுக வலுவாக இருக்கிறது.
இந்த பகுதியில் வாக்கு சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு குஷி மோடில் இருக்கிறது. வட மாவட்டங்கள் மற்றும் கொங்கு பகுதிகளில் தவெகவுக்கு கட்டமைப்பும் கிடையாது.. வாக்கும் கிடையாது.. அப்படி இருந்தும் வாக்கு சதவிகிதம் அதிகரித்திருக்கிறது என்றால், ஆட்சிக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருக்கின்றனர் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக நம்புகிறாராம்.
சேலம் மாவட்டத்தின் உள்ளூர் நிர்வாகிகளுடன் கண்டிப்பாக அதிமுக ஆட்சிதான் அடுத்து என்று கொண்டாட்டமாக கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் அதிக வாக்குகளை பிரித்தால், அது அதிமுகவுக்கு சாதகமாக தான் இருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் சேலத்தில் யாருக்கு என்ன இலாகா என்பது வரை ஆலோசிக்க தொடங்கிவிட்டாராம்.
அதிமுக எங்கெல்லாம் கூட்டணி கட்சியை நிறுத்தி இருக்கிறதோ, அங்கெல்லாம் தவெக 2வது இடம் பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் சென்னை மற்றும் டெல்டா மாவட்டங்களில் தவெக பிரிக்கும் வாக்குகள், அதிமுகவுக்கு சாதகமாக மாறலாம் என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.
-
எனக்கு Clean அரசுதான் வேணும்! காதுக்கு ஏதாவது வந்தது தொலைச்சிடுவேன்! அமைச்சர்களுக்கு விஜய் வார்னிங் -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்?












Click it and Unblock the Notifications