எதிர்க்கட்சிகளே பங்கேற்காத நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வென்றதாக சபாநாயகர் அறிவிப்பு!
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
சென்னை: தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.
முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி சனிக்கிழமை காலை சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். ஆனால் இதற்கு திமுக, காங்கிரஸ் மற்றும் ஓபிஎஸ் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூவத்தூர் சிறையில் இருந்து எம்.எல்.ஏக்களை கைதிகளைப் போல நேரே சட்டசபைக்கு அழைத்து வந்து வாக்கெடுப்பு நடத்துவது சரியல்ல; அவர்களை தொகுதிகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஒருவாரம் கழித்து ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுகவினர் வலியுறுத்தினர்.

வெளியேறிய சபாநாயகர்
இதனால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. சபாநாயகர் தனபால் இந்த அமளியை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினார்.

2 முறை ஒத்திவைப்பு
இந்த அமளியால் முதலில் பிற்பகல் 1 மணி வரை சபை நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியபோதும் அமளி நீடித்ததால் 2-வது முறையாக 3 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

திமுக எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல்
இதற்கு எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அப்போது திமுக எம்.எல்.ஏக்கள் தாக்கப்பட்டனர்.
|
ஸ்டாலின் சட்டை கிழிப்பு
மு.க.ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. பின்னர் கிழிந்த சட்டையுடன் ஆளுநரிடம் புகார் தெரிவிக்க ஸ்டாலின் சென்றனர். பின்பு 3 மணிக்கு சட்டசபை மீண்டும் கூடியது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வென்றதாக அறிவிப்பு
உடனடியாக பழனிச்சாமியின் தீர்மானத்தின் மீது சபாநாயகர் தனபால் தலைகளை எண்ணும் நடைமுறையின்படி வாக்கெடுப்பு நடத்தினார் சபாநாயகர். இதில் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 எம்.எல்.ஏக்களும் எதிராக 11 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையை சபாநாயகர் ஒத்திவைத்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications