தினகரன் ஆதரவு 18 பேருக்கும் எடப்பாடி தரப்பு அழைப்பு? தீர்ப்பு வெளியாகும் நிலையில் நமது அம்மா பாச மழை
Recommended Video

சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தீர்ப்பு இன்று வெளியாக உள்ள நிலையில், அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா, ஒரு கவிதை பாணியிலான கருத்தை வெளியிட்டுள்ளது.
அரசியல் கருத்துக்களை நையாண்டியோடு எடுத்து சொல்லும், சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்படும் பத்தியில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது.

பதினெண் கீழ்க் கணக்கு... என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள அந்த கவிதையில், சேராத இடம் சேர்ந்து 18 பேர் வீழ்ந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால்தான்..
சகுனியை சார்ந்தோர் அழிந்ததும்.. சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்... அவனை நம்பிய அவல் குசேலனும் அதி குபேரன் ஆநதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே!
திருமாலை வணங்கியதால் முடி துறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுனஅனே நன்மைகள் குவிகிறது!
இவ்வாறு நீண்டு செல்கிறது அந்த கவிதை. இதன் மூலம், தினகரன் தரப்பை துரியோதனர் கூட்டத்தோடு ஒப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பஞ்ச பாண்டவர்கள் தரப்புடன் ஒப்பிட்டுள்ளது இந்த கவிதை. இதன் மூலம், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் பிரச்சினை இருக்காது என்று மறைமுகமாக 18 பேருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications