செலவைக் குறைக்க ....10,12ம் வகுப்புகளுக்கு சேர்த்தே தேர்வு நடத்த தமிழக அரசு திட்டம்?
கோவை: தேர்வுக்கான செலவுகள் மற்றும் ஆட்கள் தேவையைக் குறைக்கும் வகையில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை சேர்த்து நடத்தலாமா என்று தமிழக அரசின் கல்வித்துறையும்,தேர்வுகள் இயக்குநரகமும் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது உண்மையாக இருந்தால், வரும் மார்ச் மாதத்தில் பிளஸ் டூ தேர்வுடன், 10ம் வகுப்பு தேர்வும் இணைத்தே நடத்தப்படும் என்று தெரிகிறது.

பறக்கும் படைகளை அமைப்பது, ஆசிரியர்களுக்கு தேர்வு அதிகாரிகளுக்கான படிகளைத் தருவது, கேள்வித்தாள்களை கொண்டு செல்வது, விடைத்தாள்களை அனு்பி வைப்பது என பல விதமான செலவுகளை ஆண்டுதோறும் கல்வித்துறை சந்தித்து வருகிறது. தேர்வுகள் தனித் தனியாக நடத்துவதால் இரட்டிப்புச் செல்வும் ஆகிறது.
எனவே இவற்றை குறைக்க இரு தேர்வுகளையும் இணைத்து நடத்துவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து இயக்குநரகம் யோசனை செய்து வருகிறதாம்.
இப்படி இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்தினால் பாதி செலவு குறையும் என்பது தேர்வுகள் இயக்குநரகத்தின் யோசனையாகும். மேலும் ஆசிரியர்கள் தேவையும் பாதியாக குறையும். தேர்வு மையங்களும் பாதியாக குறையும்.
தேர்வுகளை நடத்தும்போது தேர்வு கண்காணிப்பாளர்களை நியமிப்பதில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. பிஜி ஆசிரியர்கள், பிடி ஆசிரியர்கள் தவிர பிற ஆசிரியர்களையும் தேடிப் பிடித்துக் கூப்பிட வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சிக்கல்களைத் தீர்க்க இரு தேர்வுகளையும் சேர்த்து நடத்துவதே சரியான வழி என்று தேர்வுகள் இயக்குநரக அதிகாரிகள் கருதுகிறார்கள்.
இதுதொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் இயக்குநரக அதிகாரிகள் ஆலோசனையும் நடத்தியுள்ளனர். அவர்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளனர். ஆனால் இந்த யோசனைக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனராம்.
அதேசமயம் சில மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனராம்.
இந்த யோசனை அமலாக்கப்பட்டால் ஒரே தேர்வு அறையில் பத்து மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் கலந்து உட்கார வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என்று தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications