”தேர்தல் செலவுக்கு கையில் காசில்லைங்க...சீட் வேணாம்”.. இப்படியும் ஒரு தேமுதிக எம்.எல்.ஏ!
சென்னை: சென்னையில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. ஒருவர் தேர்தலுக்காக செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டிபோட விரும்பவில்லை என்று கூறியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் சென்னையில் எழும்பூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. நல்லதம்பி. மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் பிரிக்ளின் ரோட்டில் ரோட்டோர சைக்கிள் கடை நடத்தி வருகிறார். விஜயகாந்தின் தீவிர ரசிகரான இவர் கடந்த தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். ஆனால் இந்த தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லாததால் போட்டியிட விரும்பவில்லை என்று கட்சி தலைமையிடமே கூறி விட்டார்.

இதுகுறித்து அவர், "உண்மைதான். போட்டியிட விருப்பமனுவும் கொடுத்து இருந்தேன். ஆனால் இப்போதைய அரசியல் சூழ்நிலையில் போட்டியை சமாளிக்க செலவு செய்யும் அளவுக்கு என்னிடம் பண வசதி இல்லை. எனவே போட்டியிட விரும்பவில்லை என்று கேப்டனிடம் கூறினேன்.
நான் மிக சாதாரண மானவன். பட்டா இல்லாத அரசாங்கம் கொடுத்த கல்நார் ஓட்டு வீட்டில்தான் குடியிருக்கிறேன். ரோட்டோர சைக்கிள் கடை நடத்தி பிழைப்பு நடத்தினேன். சட்டசபையை எட்டிகூட பார்க்க முடியாத என்னை சட்ட சபைக்குள் அமர்த்தி அழகு பார்த்தவர் கேப்டன். கடைசி காலம் வரை தே.மு.தி.க.வில்தான் இருப்பேன். எம்.எல்.ஏ. சம்பளமாக மாதம் ரூபாய் 55 ஆயிரம் கிடைத்தது. அதில் பி.ஏ. சம்பளம், அலுவலக நிர்வாக செலவுகள், போக்குவரத்து செலவுகளை சமாளித்து குடும்பம் நடத்தி வருகிறேன். சேமிப்பு என்று எதுவும் இல்லை.
எனது குழந்தைகள் படிப்புக்காக இப்போது பக்கத்து தெருவில் ரூ.6 லட்சம் லீஸ் வீட்டில் வசிக்கிறேன். 6 மாதம் சஸ்பெண்டில் இருந்த போது மாதம் ரு.10 ஆயிரம் குடும்ப செலவுக்கு கேப்டன் தந்தார். இந்த 5 ஆண்டில் யாரிடமாவது கை நீட்டினார், மிரட்டி பணம் வாங்கினார் என்று என் மீது எந்த புகாரும் கிடையாது. ஜாலியாக இருக்கிறேன். இந்த அரசு ஒரு எம்.எல்.ஏ. அலுவலகம் கூட ஒதுக்கியது கிடையாது. எனது சைக்கிள் கடையைதான் அலுவலகமாக பயன்படுத்தி வருகிறேன்.
எனது நிலையை பார்த்து அ.தி.மு.க, தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் பல ஆசைகளை காட் டி கூப்பிட்டார்கள். ரூ.5 கோடி முதல் ரூ.15 கோடி வரை தருவதாக பேரம் பேசினார்கள். எத்தனை கோடிகள் கிடைத்தாலும் அந்த துரோகத்தை செய்ய மாட்டேன். தெருக்கோடியில் இருந்தாலும் கேப்டனின் தொண்டனாகவே இருப்பேன்.
நான் போட்டியிடவில்லை என்றதும் ஏண்டா, தேர்தலில் நில்லு என்று கேப்டனும், சுதீசும் வற்புறுத்தத்தான் செய்தார்கள். ஆனால் செலவு செய்ய முடியாததால் நான் மறுத்து விட்டேன். அதற்கு பதிலாக வேறு ஏதேனும் பணிகளை தாருங்கள் என்றேன். இப்போது அண்ணியாருடன் (பிரேமலதா) பிரசாரத்துக்கு அனுப்பி உள்ளார். மாநிலம் முழுவதும் சுற்றி வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications