சுங்கவரியில் முறைகேடு: திருச்சி விமான நிலையத்தில் சிபிஐ திடீர் ரெய்டு- 6 பேர் கைது!!
திருச்சி: திருச்சி விமான நிலையத்தில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்ததையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர். இம்முறைகேடு தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் சர்வதேச விமானநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்திற்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்தும் ஏராளமான பயணிகள் வந்து செல்வதால் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.

இந்த விமான நிலையம் வழியாக வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் தங்கம் உள்பட அனைத்து பொருட்களுக்கும் சுங்க வரி செலுத்தி அதன் பின்னர் பொருட்களை எடுத்து உரியவர்கள் எடுத்து செல்ல வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் சமீப காலமாக சுங்கவரியை முறையாக பயணிகளிடம் வசூல் செய்யாமல் விமான நிலையத்தில் உள்ள சுங்க இலாகா அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 1.30 மணிக்கு சி.பி.ஐ. அதிகாரி லாசர் தலைமையிலான 8 பேர் கொண்ட குழுவினர் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தனர்.
பின்னர் அங்குள்ள சுங்க இலாகா அதிகாரிகள் அலுவலகம் முழுவதையும் அங்குலம், அங்குலமாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர்.
விமான பயணிகள் வெளியேறும் பகுதியில் உள்ள 10 சுங்க இலாகா கவுண்டர்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முறைகேடாக பெறப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் சுங்க இலாகா அதிகாரிகள் 6 பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர் சி.பி.ஐ. அதிகாரிகள். இச்சோதனையும் கைது நடவடிக்கையும் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications