ஜல்லிக்கட்டால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றிக்கு பாதிப்பு இல்லை: இல.கணேசன் நம்பிக்கை
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி பாதிக்காது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் சுற்றறிக்கை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. ஆனால் இதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனால் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டுகள் நடைபெறாமல் போனது.

இது தென் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனிடையே மதுரையில் செய்தியாளர்களை பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று சந்தித்து பேசினார்.
அப்போது அவரிடம் ஜல்லிக்கட்டு தடை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த இல. கணேசன், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் வாதாடி வெற்றி பெறுவோம். ஜல்லிக்கட்டு விவகாரத்தால் தமிழகத்தில் பாஜகவின் வெற்றி பாதிக்காது.
தமிழக சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து 3 அல்லது 5 நாட்களில் தேசிய தலைமை முடிவு எடுக்கும். இதில் தாமதம் ஏற்படாது என்றார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications