ஜெயலலிதா பற்றி அவதூறாகவெல்லாம் பேசவில்லை.. கொடும்பாவி எரித்தால் பரவாயில்லை: இளங்கோவன்
சென்னை: நான் ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி குறித்து டெல்லியிலுள்ள தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளிக்க சென்றிருந்த இளங்கோவன், சென்னை திரும்பியபோது, மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

திருவாரூரில் கருணாநிதி முன்னிலையில், ஜெயலலிதா குறித்து நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் அருவருக்கத்தக்க வகையில் இளங்கோவன் பேசியதாக குற்றச்சாட்டு கிளம்பியது குறித்தும், அதிமுகவினர், இளங்கோவன் உருவபொம்மை எரிப்பு போராட்டங்கள் நடத்துவது குறித்தும், நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது இளங்கோவன் கூறுகையில், நான் ஜெயலலிதா பற்றி அவதூறாக எதையும் பேசவில்லை. எனது கொடும்பாவியை கொளுத்துவதாக கேள்விப்பட்டேன். கொளுத்தினால் கொளுத்திவிட்டு போகட்டும் என்றார்.
காங்கிரசில் போட்டியிடுவோருக்கு பணம் பெற்றுக்கொண்டு சீ்ட் கொடுத்துள்ளதாக புகார் வந்துள்ளதே என்ற கேள்விக்கு, "சீட் கிடைக்கவில்லை என்பதற்காக சிலருக்கு வருத்தம். எனவே குற்றம் சொல்கிறார்கள். ஐஎன்டியூசியை சேர்ந்த 2 பேருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளோம். பணம் வாங்கிக் கொண்டு சீட் தரவில்லை. சீட் கிடைக்காதோர் வருத்தப்படுவது இயற்கையானது. அது போகப்போக சரியாகிவிடும்". இவ்வாறு இளங்கோவன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications