ஈவிகேஎஸ் பேச்சில் நாகரீகமே இல்லையே... ’கேப்’ கார்த்திக் விமர்சனம்!
சென்னை: டெல்லி தேர்தலில் பாஜகவின் தோல்வி பற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்-ன் கருத்தில் நாகரீகம் இல்லை என விமர்சித்துள்ளார் நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான கார்த்திக்.
டெல்லி சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67ல் அமோக வெற்றி பெற்று, அங்கு ஆட்சி அமைக்கிறது ஆம் ஆத்மி கட்சி. மத்தியில் ஆளும் பாஜக, டெல்லி தேர்தலில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸுக்கு ஒரு இடத்தில் கூட வெற்றி கிட்டவில்லை.
இந்நிலையில், டெல்லி தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்துத் தெரிவித்திருந்தார். அதில், அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், இது தொடர்பாக நாடாளும் மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான கார்த்திக் தி இந்து நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

கெஜ்ரியே எதிர்பார்க்காத வெற்றி...
டெல்லியில் அரசியலில் இப்படி யொரு அதிரடி மாற்றம் ஏற்பட என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?
இப்படித் தலைகீழாக மாற்றம் வரும் என்று கெஜ்ரிவாலே எதிர்பார்க்கவில்லை. ஆனால், மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். தனது எளிமையால் மக்களோடு மக்களாக இணைந்துவிட்டார் கேஜ்ரிவால்.

மனப்பக்குவம்...
49 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தது தவறு என மக்களிடம் மன்னிப்புக் கேட்டார். இந்த மனபக்குவம் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வர வேண்டும்.

தனி மாநில அந்தஸ்து...
நம்மோடு இருப்பவருக்கு வாக்களித்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று மக்கள் நினைத்தார்கள்; கெஜ்ரிவாலுக்கு அபார வெற்றியைக் கொடுத்தார்கள். ஆனால் ஒன்று, டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்காதவரை கெஜ்ரிவால் எதையுமே சாதிக்க முடியாது.

அரசியல்ல இதெல்லாம் சகஜம்...
காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் காப்புத் தொகையை இழந்திருக்கிறார்களே?
வெற்றி - தோல்வி என்பது அரசி யலில் சகஜம். 2 எம்.பிக்களை வைத்திருந்த பாஜகவுக்கு இப்போது 280 எம்.பிக்கள் கிடைக்க வில்லையா? மக்களுக்கு நல்லது செய்ததால்தான் தொடர்ந்து மூன்று முறை காங்கிரஸ் டெல்லியை ஆண் டிருக்கிறது.

காங். தோல்விக்கு காரணம்...
லோக்சபா தேர்தலில் இருந்த ஊழல் பிரச் சாரம் இன்னும் அப்படியே இருப் பதால்தான் இப்போது காங்கிரஸுக்கு இந்த நிலைமை. எனினும், காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும்.

அரசியல் நாகரீகம் இல்லை...
காங்கிரஸ் தோற்றதைப் பற்றிக் கவலைப்படாமல், டெல்லியில் பாஜக தோற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்கிறாரே உங்கள் நண்பர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்?
எதிர்க் கட்சிகளை எதிரிக் கட்சிக ளாகப் பார்க்கக் கூடாது. நாம் ஒன்றும் பிரிட்டீஷ்காரர்களுடன் சண்டை போடவில்லை. எனவே, இன்னொருவர் தோற்றால் எனக்கு சந்தோஷம் என்று சொல்வது நாகரிக அரசியல் இல்லை.

பாக். மாதிரி திண்டாடணும்...
யார் ஜெயித்தாலும் ஜனங்களுக்கு நல்லது செய்யுங்க. அனைவரும் ஒற்றுமையாக இருந்தால்தான் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டுவர முடியும். இல்லா விட்டால் பாகிஸ்தான் மாதிரித்தான் திண்டாடணும்.

அடிக்கடி "கேப்" மாத்துராறே கார்த்திக்
இதே கார்த்திக்தான் திடீரென சில மாதங்களுக்கு முன்பு சத்தியமூர்த்தி பவனுக்கு விசிட் அடித்தார். நான் கோவிலுக்கு வந்துள்ளேன் என்று பரவசமாக பேசினார். ஈவிகேஎஸ் இளங்கோவனுடன் சந்தோஷமாக பேசி விட்டு வந்தார். ஆனால் இப்போது ஈவிகேஎஸ் பேச்சில் நாகரீகம் இல்லை என்று கூறியுள்ளார்.
இப்படி அடிக்கடி "கேப்" மாத்திப் பேசினால் தப்பா பேச மாட்டாங்களா கார்த்திக் சார்?
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications