ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் கார்த்தி சிதம்பரம் தப்ப முடியாது - இளங்கோவன் பேட்டி
மதுரை: ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கில் இருந்து கார்த்தி சிதம்பரம் தப்பிக்கவே முடியாது என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற உத்தரவுப்படி 4 ஆவது நாளான நேற்று தல்லா குளம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட காரில் வந்த இளங்கோவனை திரளான காங்கிரசார் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர்.

கையெழுத்திட்டு விட்டு திரும்பிய இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசியபோது, ''தற்போது வெளியாகி உள்ள கருத்து கணிப்பில் முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் கட்சியின் பெயர் இடம்பெறவில்லை. இந்த கருத்துகணிப்பு சிலரது தூண்டுதலின்பேரில் எடுக்கப்பட்டதாகும். இது நம்பும்படியாக இல்லை. மேலும் இது சரியாகவும் எடுக்கப்படவில்லை.
தமிழகத்தில் தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் ஊழல் வழக்குகளை கார்த்தி சிதம்பரம் சந்தித்தே ஆக வேண்டும். அதில் இருந்து அவர் தப்பிக்க முடியாது. என் மீது போடப்பட்ட வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக நான் டெல்லி சென்று சோனியாவை சந்தித்ததாக கூறுவது தவறு. நான் அதற்காக டெல்லி செல்லவில்லை.
நான் ராகுல் உள்ளிட்ட தலைவர்களிடம் போனிலேயே பேசிக்கொள்வேன். என்னை எதிர்க்கிற காங்கிரஸ் தலைவர்கள் பற்றி எனக்கு கவலை இல்லை. நான் தொண்டரோடு தொண்டராக இருக்கவே விரும்புகிறேன்''என்று கூறினார்.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications