ஒழுக்கத்தைப் பற்றி பேச தங்கபாலுவுக்கு யோக்கியதை இல்லை - இளங்கோவன் திகுதிகு!
சென்னை: ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "பதவி என்பது ஒன்றும் நிரந்தரமானதல்ல. கட்சி தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு கட்டுப்படுவேன். நேர்மை மற்றும் ஒழுக்கத்தை பற்றி பேச தங்கபாலுக்கு யோக்கியதை இல்லை, என்னை நேர்மையற்றவர் என்று கூறும் தங்கபாலு, என்னுடன் இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா எனக் கூறவேண்டும்.

என்னைப் பொருத்தவரை நான் கட்சி தொண்டர்களையும் மூத்த தலைவர்களையும் அரவனைத்து செல்கிறேன். திமுக தற்போது ஆட்சியில் இல்லை என்பதால் அதைப் பற்றி நான் எந்த விமர்சனமும் கூறவில்லை அவ்வளவுதான். அதிமுக ஆட்சியிலிருப்பதால் அதை விமர்சிக்கிறேன்.
அவர்கள் புகார்கள் சொன்னார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது. அவர்கள் கட்சித் தலைவர் சோனியாவை சந்தித்தார்கள். இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்கள் இன்றும் தங்களை காங்கிரஸ்காரர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
என்னை பொறுத்தவரை நான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கின்றேன். எனக்கு பதில் யாரையாவது மேலிடம் நியமிக்க முடிவு செய்தால் அதனை நான் ஏற்றுக்கொள்வேன். இதற்கு மேலிடத்திற்கு உரிமை உள்ளது.
நான் தலைவர் ஆன மறுநாளே இவர்கள் டெல்லி செல்வார்கள் என்று எதிர்பார்த்தேன். ஒரு வருடம் கழித்து வந்திருக்கிறார்கள். நான் வேலை செய்யவில்லை என்று சொல்வதை என்னால் ஏற்றக்கொள்ள முடியாது. இந்த ஒரு வருட காலத்தில் என்ன வேலை நடந்திருக்கிறது. கட்சிப் பணிகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தது தொண்டர்களுக்கு தெரியும்.
கவிஞர் தங்கபாலு என்ற பெயரோடு அரசியலுக்கு வந்தவர். இன்றைக்கு ஒரு பொறியியல் கல்லூரி, ஆத்தூருக்கு பக்கத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நிலம், அதேபோல் தருமபுரி, கிருஷ்ணகிரியில் கிரானைட் சுரங்கங்கள், அதேபோல் கேரளாவில் மிகப்பெரிய எஸ்டேட், தங்கவேலு என்ற பெயரில் பொறியியல் கல்லூரி சென்னையில் வைத்துள்ளார். இவை எல்லாம் கவிஞர் கண்ணதாசனைப்போல் பாட்டெழுதி சம்பாதித்ததா அல்லது கதை வசனம் எழுதி சம்பாதித்ததா அல்லது உழைத்து சம்பாதித்ததா என்பதை அவர் கணக்கு வெளியிட வேண்டும் என்றார் இளங்கோவன்.
-
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications