இளங்கோவன் -வாசன் ஆதரவாளர்கள் போட்டி கூட்டத்தால் பரபரப்பு...நெல்லையில்!
நெல்லை: நெல்லையில் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் அருகருகே போட்டிக் கூட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காங்கிரசில் இருந்து பிரிந்து சென்ற ஜிகேவாசன் வரும் 28ம் தேதி திருச்சியில் தனிக்ட்சி தொடங்குகிறார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து தொண்டர்கள் கலந்துகொள்ள கட்சியினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எம்பிக்கள் பீட்டர் அல்போன்ஸ், ராமசுப்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே நெல்லை மாநகர் மற்றும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்தது. முன்னாள் எம்பி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ராம்நாத் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஜிகே வாசன் ஆதரவாளர்கள் ஆலோசனை கூடடம் நடத்தியதை அடுத்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது பலத்தை நிரூபிக்க இந்த அவசர கூட்டத்தை ஏற்பாடு செய்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டு கூட்டமும் அருகருகே நடந்ததால் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications