ஸ்ரீரங்கம்: வரிந்து கட்டும் அதிமுக- திமுக; திணறும் பாஜக, கம்யூனிஸ்ட்கள்
திருச்சி: ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்வதற்கு 4 நாட்களே உள்ள நிலையில், அதிமுக, திமுக, பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிப்ரவரி 13ஆம்தேதி நடைபெற உள்ளது. 11ஆம் தேதியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் வளர்மதி, தி.மு.க. சார்பில் ஆனந்த், பாஜக சார்பில் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் அண்ணாத்துரை உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். இவர்கள் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அதிமுக - திமுக வேட்பாளர்களின் தீவிர வாக்கு சேகரிப்புக்கும், கவனிப்புக்கும் ஈடு கொடுக்க முடியாமல் பாஜக, கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்கள் திணறி வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவினர் விறுவிறுப்பு
அதிமுக வேட்பாளர் வளர்மதிக்கு ஆதரவாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் அடங்கிய குழுவினர் விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

நிர்மலா பெரியசாமி
வளர்மதிக்கு ஆதரவாக அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செய்திவாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி நேற்று ஸ்ரீரங்கத்தின் முக்கிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார். மக்கள் முதல்வரின் சாதனைகளை கூறி அவர் வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

திமுகவினர் சுறுசுறுப்பு
திமுக வேட்பாளர் ஆனந்துக்கு ஆதரவாக திமுகவினர் தொகுதி முழுவதும் வலம் வருகின்றனர். ஆங்காங்கே பட்டுவாடவையும் சத்தமில்லாமல் முடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சிகாலத்தில் பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு குறித்து கூறி வாக்கு சேகரிக்கின்றனர் திமுகவினர்.

ஸ்டாலின் ஆலோசனை
இதனிடையே ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் குறித்து திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திருச்சியில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். மாவட்ட செயலர்கள், கட்சி நிர்வாகிகள் ஆகியோரை ஸ்டாலின் தனித்தனியே சந்தித்துப் பேசினார் ஸ்டாலின்.

மூன்றுநாள் பிரச்சாரம்
ஸ்ரீரங்கம் தொகுதியில் 9ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

மூன்றுநாள் பிரச்சாரம்
ஸ்ரீரங்கம் தொகுதியில் 9ஆம் தேதியில் இருந்து 11 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் ஸ்டாலின் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். தேர்தலுக்கான வியூகம் குறித்தும் அவர் தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

சின்னச் சின்ன மோதல்
சில தினங்களுக்கு முன்னர் மணப்பாறை ஒன்றியத்தில் உள்ள மொண்டிபட்டி என்ற கிராமத்தில் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கூறி அவர்களுடன் அ.தி.மு.க.வினர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் மொண்டிபட்டி நாகராஜனின் தம்பி தர்மராஜ் தாக்கப்பட்டார்.

திமுகவினர் கைது
இந்த நிலையில் தி.மு.க.வினர் தாக்கியதாக அ.தி.மு.க.வினர் மணப்பாறை போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து நாகராஜனை நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர். தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட செய்தி அறிந்ததும் அக்கட்சியினர் திரண்டு வந்து மறியல் செய்ய முடிவு செய்தனர். இதையடுத்து நாகராஜனை போலீசார் விடுவித்தனர்.

நலத்திட்டப்பணிகள்
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தல் நடைப்பெறுவதை முன்னிட்டு அங்கு பல்வேறுப் பகுதிகளில் வளர்ச்சிபணிகள் நடைப் பெற்று வருவதாக திமுகவினர் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் ஊராட்சி 5வது வார்டு தெற்குத்தெருவில் புதிய மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 6 வதுவார்டு மசூதிக்கு எதிர்புரம் விதி முறையை மீறி புதிதாகப் போடப்பட்டுவரும் சிமிண்ட் சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விதிமீறல்
ஸ்ரீரங்கம் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் டிராபிக் ராமசாமி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அதிமுக, திமுக-வினர் அப்பட்டமாக விதிகளை மீறுவதாக குற்றம் சாட்டினார். வேஷ்டி-சேலை, உணவு மற்றும் பரிசுப் பொருட்கள் வீடுவீடாக வழங்கப்படுகின்றன. இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

வழக்குத் தொடருவேன்
இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு 8 புகார்களை அனுப்பியுள்ளேன். அதன் காரணமாகவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா ஆய்வுக்காக திருச்சிக்கு வந்துள்ளார். முறைகேடுகள் தொடர்பாகவும், அவற்றை தடுக்கத் தவறிய காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வரும் திங்கள்கிழமை வழக்குத் தொடர உள்ளதாகவும் டிராபிக் ராமசாமி கூறியுள்ளார்.

4 நாட்கள்
இடைதேர்தல் பிரச்சாரம் ஓய்வதற்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் களை கட்சியுள்ளது தேர்தல் பிரச்சாரம். கையில் பணம் புரள்வதால் உற்சாகத்தில் உள்ளனர் தொகுதிவாசிகள்.

பாஜக – கம்யூனிஸ்ட்டுகள் திணறல்
இருபெரும் திராவிடக்கட்சிகளின் வியூகத்திற்கு இடையே பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களின் பிரச்சாரத்தை தொகுதி முழுவதும் செய்துவருகின்றனர். ஆனாலும் திரவிடக்கட்சிகளுடன் அவர்களால் ஈடுகொடுக்க முடியவில்லை என்பதே உண்மை. திராவிடக்கட்சியினர் பணம் கொடுத்து வாக்குகளை பெற முயற்சிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அதிமுக கட்சி சின்னம்
அதிமுகவினர் இரட்டை இலை சின்னத்தை தடை செய்யப்பட்ட பகுதியில் வரைவதாகவும் பாஜகவினர் குற்றம் சாட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

4 நாட்கள்
இடைதேர்தல் பிரச்சாரம் ஓய்வதற்கு இன்னும் 4 தினங்களே உள்ள நிலையில் தொகுதி முழுவதும் களை கட்சியுள்ளது தேர்தல் பிரச்சாரம். கையில் பணம் புரள்வதால் உற்சாகத்தில் உள்ளனர் தொகுதிவாசிகள்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications