ஓட்டு கேட்டு ஊருக்குள்ள வராதீங்க… அதிமுக எம்பி தம்பிதுரையை அதிர வைத்த வாக்காளர்கள்
கரூர்: கரூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்ற அதிமுக எம்.பியும் தற்போதைய அதிமுக வேட்பாளருமான தம்பித்துரையை ஊருக்கு நுழைய விடாமல் வாக்காளர் தடுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தம்பித்துரை பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு திரும்பினார்.
கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை எம்.பி. பிரச்சாரம் செய்து வருகிறார். வியாழக்கிழமை செவலிப்பட்டி என்ற இடத்தில் பிரச்சாரத்தை தொடங்கினார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா, அட்மா சேர்மன் பழனியாண்டி, துணை சேர்மன் திருமூர்த்தி உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் சென்றனர்.

இரவு 7.30 மணியளவில் வானதிரையான்பட்டி கிராமத்தில் தம்பிதுரை பிரச்சாரம் செய்ய சென்ற போது கிராம மக்கள் ‘கடந்த 5 வருடத்தில் எங்கள் ஊரில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்யப்படவில்லை. இங்கு ஓட்டு கேட்டு நீங்கள் ஊருக்குள் வரக் கூடாது‘ என்றனர்.
இதனால் தம்பிதுரையுடன் வந்த அதிமுகவினருக்கும், ஊர் பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில் அதிமுகவை சேர்ந்த ஒன்றிய குழு தலைவர் சுப்பையாவின் மகன் சக்திவேல் (38) என்பவரது மண்டை உடைந்தது. இதனால், தம்பிதுரை பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து சென்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications