அனுமதியின்றி பொதுக்கூட்டம்: அதிமுகவினர் 100 பேர் மீது வழக்கு
நெல்லை: நெல்லை அருகே அனுமதியின்றி கூட்டம் நடத்தியதற்காக அதிமுகவினர் 100 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நெல்லை தொகுதி சார்பில் ஆலங்குளம் எஸ்எஸ்என் திருமண மண்டபத்தில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம் நடத்த முறைப்படி தேர்தல் அலுவலர்களிடம் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும்படை அலுவலர் கமலகுமாரி கூட்டம் நடந்த திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு நிர்வாகிகளிடம் இந்த கூட்டத்திற்கு முறையான அனுமதி பெறாததால் கூட்டத்தை நடத்தக் கூடாது என அவர் எச்சரித்தார். ஆனால் நிர்வாகிகள் அதை பொருட்படுத்தாமல் கூட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.
இதனால் திகைத்த அவர் இது குறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்தார். அவரின் புகாரின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் சந்தன கார்த்திகா அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக சுமார் 100 அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதிமுகவினர் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது நெல்லை ஆளும்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications