ராசிபலன் மீம்ஸ்... பொது இடத்தில் நடனம்.. குறும்படம்: கலக்கும் தேர்தல் ஆணையம்
சென்னை: அரசியல் கட்சிகளுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் என்பது போல தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து, ராசிபலன், நடனங்களின் மூலம் விழிப்புணர்வு, 100 சதவிகித ஓட்டு, நோட்டுக்கு ஓட்டு என பல மீம்ஸ்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தமிழக தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை முன்னிறுத்தி, தமிழக தேர்தல் துறை பணியாற்றி வருகிறது.
கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளை கணக்கெடுத்துள்ள தேர்தல் அதிகாரிகள், அப்பகுதி மக்களிடம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு குழுக்களை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை வாக்காளர்களில் 23 சதவீதம் பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமும், தேர்தல் துறை பல்வேறு வகைகளில் பிரச்சாரம் செய்துவருகிறது.
பொது இடத்தில் நடனம்
மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பஸ் நிறுத்தங்கள் போன்றவற்றில் விழிப்புணர்வு போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகின்றன. வணிக வளாகங்களில் நடனங்களும் நடைபெறுகின்றன.
|
புத்தாண்டு ராசிபலன்
வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாட்ஸ் அப்பில், ‘மீம்ஸ்'கள் மூலம் தேர்தல் துறை, அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்கி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தமிழ்ப் புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு, புத்தாண்டு வாழ்த்துகளை கூறியதோடு, ராசிபலன் கூறுவது போலவே மே 16-ம் தேதி வாக்களிக்க வேண்டும் என புதிய ‘மீம்ஸ்' வெளியிடப்பட்டுள்ளது.
|
வாக்களிக்க அழைப்பு
திருமண பத்திரிக்கை வடிவில் வாக்காளர்களை வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர். கூடவே அன்பளிப்புகள் பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும் என்று கூறியுள்ளனர்.
|
நோட்டுக்கு ஓட்டு போடாதீங்க
'காசு பணம் துட்டு மணி... மணி... என்ற பிரபல பாடலை வைத்து மீம்ஸ் தயாரித்துள்ளனர் தேர்தல் அதிகாரிகள்.
|
குறும்படம்
இதேபோல ஒட்டு போட லஞ்சம் கொடுப்பதை கண்டிக்கும் வகையில் குறும்படங்களும் வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

வாக்காளர்களிடம் விழிப்புணர்வு
இதுபோல் தினசரி புதிது புதிதாக தேர்தல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஏதேனும் செய்துகொண்டே இருக்கின்றனர்.
தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் வரை, வாக்காளர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடக்கும். அன்றாட நிகழ்வுகள் அடிப்படையில் ‘மீம்ஸ்'கள் பதிவிடப்படுகின்றன'' என்று கூறியுள்ளார் ராஜேஸ் லக்கானி.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications