தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இருப்பது 50 நாள் தான்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ஒரே நாளில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே தேர்தலுக்கான கவுண்டவுன் தொடங்கியுள்ளது.
இன்னும் தேர்தலுக்கு 50 நாட்களே உள்ள நிலையில் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஜுரம் கொழுந்துவிட துவங்கிவிட்டது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனை தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் இன்று அறிவித்தார்.
ஏற்கெனவே தேர்தல் ஆணையம் தமிழகத்தில் கட்சிகளிடம் கருத்து கேட்டிருந்தது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications