ஓட்டுப்போட வந்தா “பளார்” இலவசம் – வாக்காளரை அறைந்த தேர்தல் அதிகாரி
மணப்பாறை: நேற்று நடைபெற்ற லோக்சபா தேர்தல் அமைதியான முறையில் நிறைவடைந்திருந்தாலும் ஆங்காங்கு சில குண்டுகள் வெடிக்கத்தான் செய்துள்ளன.
அதிலும், கரூர் அருகே உள்ள மணப்பாறை தொகுதியில் வாக்காளர் ஒருவரை தேர்தல் அதிகாரி ஒருவர் அறைந்த சம்பவம் மக்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மணப்பாறை சட்டசபை தொகுதி, கோவில்பட்டி ரோட்டில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளியில், 99 ஆம் எண் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு இயந்திரம் பழுதானது. மாற்று இயந்திரம் வர தாமதமானதால், 30 நிமிடம் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது.
மற்றொரு மையத்தில், 92 ஆவது ஓட்டுச்சாவடியில், நாகஜோதி என்ற பெண் ஓட்டளிக்க வந்தார். அப்போது, கூட்டமாக நுழைந்த மூத்த குடிமக்களுடன் இந்த பெண்ணும் நுழைந்ததால், ஆத்திரமடைந்த மண்டல அலுவலர் ரேணுகாதேவி, "உனக்கு அறிவு இல்லை. இப்படி நுழையிற" என்று, அந்த பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணுக்கு ஆதரவாக பிற வாக்காளர்கள் திரண்டு வந்து, ரேணுகா தேவியை கண்டித்தனர்.இதனால், நாகஜோதியிடம் அவர் மன்னிப்புக்கேட்டார். இதையடுத்து, அங்கு சகஜநிலைமை திரும்பியது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications