தமிழக அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள்- சென்னையில் நேற்று துவக்கம்
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வகுப்புகள் தொடங்கியுள்ளது. இந்த பயிற்சி இம்மாதம் 13 ஆம் தேதி முடிவடைகிறது.
இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், தேர்தல் மேலாண்மை பயிற்சிகள் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்த 15 உயர் அதிகாரிகளுக்கு, கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சி அளித்தது. இவ்வாறு பயிற்சி பெற்ற அதிகாரிகள், மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சிகளை வழங்கினர். அதாவது, மாவட்டத்துக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்து, கடந்த டிசம்பர் 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சென்னையில் வைத்து அவர்களுக்கு தேர்தல் பணி தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டன.
தேர்தலின்போது, மேற்கொள்ள வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக, மாவட்டத்துக்கு 16 முதன்மை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள், தேர்தல் பணி தொடர்பான பல பிரிவுகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள். இவர்கள், தமிழகத்தில் சென்னை, மதுரை, சேலம், திருச்சி ஆகிய 4 மண்டலங்களாக பிரித்து, அங்கு தேர்தல் தொடர்பான பயிற்சிகளை கடந்த டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை பலருக்கு வழங்கினார்கள்.
இந்த நிலையில், முதன்மை தேர்தல் பயிற்சியாளர்களின் தேர்தல் பயிற்சி வழங்கும் திறனின் முக்கியத்துவம் அறிந்து அவர்களுக்கு சென்னையில் உள்ள அண்ணா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வைத்து இந்திய தேர்தல் ஆணையம் பயிற்சிகளை வழங்குகிறது. இந்த பயிற்சி நேற்று முதல் தொடங்கியது.
இந்த பயிற்சி 13 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. மாநில மற்றும் மாவட்ட அளவிலான பயிற்சியாளர்களும், ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 அதிகாரிகள் என்று தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளும் இந்த பயிற்சி வகுப்பில் கலந்துக்கொண்டனர். முதல் கட்ட பயிற்சியில் 94 அதிகாரிகள் கலந்து கொண்டனர். அடுத்த கட்ட பயிற்சி ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் வருகிற 19 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications