தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின் ரயில் சேவை சீரானது
மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது .
Recommended Video

சென்னை: சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் மின் கம்பி அறுந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில் சேவை இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.
சென்னையில் மாம்பலம் மற்றும் கோடம்பாக்கம் இடையே ரயில் நிலையத்தில் உள்ள மின் கம்பி அறுந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தாம்பரம் - கடற்கரை மார்க்கத்தில் ரயில் சேவை கடும் பாதிப்பை சந்தித்தது. வழக்கமான பாதையில் ரயில்களை இயக்க முடியாமல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பயணிகளிடையே பெரும் குழப்பத்தையும், அவதியையும் இது ஏற்படுத்தி விட்டது. ரயில்களில் ஏறி கூட்டம் முண்டியடிக்கும் நிலை. இதனால் படியில் தொங்கிக் கொண்டு பலர் பயணித்தனர். காலையில் இப்படி பயணித்த 5 பேர் பரங்கி மலை ரயில் நிலையத்தில் பரிதாபமாக கீழே விழுந்து பலியானார்கள்.

படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் பக்கவாட்டு சுவர் மோதி கீழே விழுந்தனர். இதனால் மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கிய 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரயில் சேவை சீராகியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications