சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை: சிஐடியு தலைவர்
சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிஐடியு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video

சென்னை: சம்பள உயர்வு தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சிஐடியு தலைவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 26 மாதங்களாக ஊதிய உயர்வு வழங்குவது காலதாமதமாகி வருகிறது.

எனவே தமிழக மின்வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்த போவதாக கூறினார்கள். இதற்காக தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு ஊழியர்களை அழைத்து இருந்தது.
இந்த நிலையில் இன்று மாலை இதற்கான பேச்சு வார்த்தை நடந்தது. இந்த பேச்சு வார்த்தை முடிந்த பின் சிஐடியு மாநில தலைவர் சுப்பிரமணியன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில் ''அரசுடன் நடந்த சம்பள உயர்வு தொடர்பான மின்வாரிய ஊழியர்கள் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. மின் வாரியத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அதிகாரிகள் எந்தவித ஏற்பாடும் இல்லாமல் பேச்சுவார்த்தைக்கு வந்தனர்'' என்றுள்ளார்.
மேலும் ''மீண்டும் 15-ம் தேதி இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும். கடைசி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை எனில் வேலை நிறுத்தம் செய்வோம்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications