கொடைக்கானலில் யானை தாக்கி பெண் பலி: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
திண்டுக்கல்: கொடைக்கானல் அருகே பேத்துப்பாறையில் யானை தாக்கியதில் பிச்சையம்மாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை அடுத்துள்ள பேத்துப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் வையாபுரி. இவரது மனைவி பிச்சையம்மாள் (57). அதே பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் வேலை செய்வதற்காக நேற்று சென்றுள்ளார். அப்போது அந்த தோட்டத்தையொட்டி வனப் பகுதியிலிருந்து வந்த காட்டு யானை, பிச்சையம்மாளை மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

காட்டு யானை நடமாட்டம் இருப்பதை தெரிவித்தும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி திரண்ட பொதுமக்கள் கொடைக்கானல் - வத்தலக்குண்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். உயிரிழந்த பிச்சையம்மாளின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து வனத்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மின்வேலி அமைத்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பை நிலவியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications