ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாளிகை, வணிக நிறுவனங்கள், கல்விக் கடைகளை அகற்ற என்ன திட்டமாம்?: ராமதாஸ்
சென்னை: நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு, நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சென்னையில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அடையாற்றின் கரையோரம் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்கித் தரும் திட்டத்தின்படி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட 10,000 வீடுகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த வீடுகளைப் பெறுபவர்களில் சிலருக்கு அதற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கியிருக்கிறார். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டிருக்கிறது.

மாற்று இடங்களுக்கான ஆணைகள் வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சைதாப்பேட்டை ஆற்றுமா நகரில் இருந்த நூற்றுக்கணக்கான குடிசைகள் இடித்து தள்ளப்பட்டிருக்கின்றன. மற்றப் பகுதிகளிலும் இந்த நடவடிக்கை தொடரவிருக்கிறது. அடையாற்றின் கரைகளில் வசித்த மக்களுக்கு அவர்களின் குடிசைகளை அகற்றி விட்டு, அடுக்குமாடி வீடுகளை ஒதுக்குவதை குறை கூற முடியாது. ஆனால், அவை எங்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் சிக்கலே. ஒக்கியம் துரைப்பாக்கம், பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக யாரும் குடியேறாமலிருந்த வீடுகள் தான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வீடுகள் அனைத்தும் அண்மையில் ஏற்பட்ட மழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் தான் உள்ளன. அந்த வீடுகள் எதிர்காலத்தில் மழை வெள்ளம் ஏற்பட்டால் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது மில்லியன் டாலர் வினா. அதுமட்டுமின்றி, இந்த குடிசைகளில் வாழ்ந்த மக்கள் அனைவரும் அன்றாடம் கூலி வேலை செய்தோ, தெருவோர வணிகம் செய்தோ பிழைப்பவர்கள். இதை சென்னையில் இருந்து தான் செய்ய முடியும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
ஆனால், அவர்களை இப்போது அவர்கள் குடியிருந்த பகுதிகளில் இருந்து பல கி.மீ. தொலைவில் அரசு குடியமர்த்தியிருக்கிறது. இப்போது குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வாய்ப்பில்லை. அதேபோல், அவர்கள் நாள்தோறும் சென்னைக்கு வந்து பிழைப்பு தேடுவதும் சாத்தியமற்றது. அடையாறு, கூவம் உள்ளிட்ட ஆறுகளின் கரைகளில் வாழ்ந்த ஏழை மக்கள் கடந்த காலங்களில் பலமுறை இவ்வாறு குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு பிழைப்பு கிடைக்காததால், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை விட்டு ஏற்கனவே தாங்கள் வசித்த பகுதிக்கே திரும்பி குடிசை போட்டு வாழத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகைய சூழலில் குடிசைவாசிகளுக்கு தொலைதூரத்தில் மாற்று இடங்களை ஒதுக்கும் தமிழக அரசின் திட்டம் சரியானதாக தோன்றவில்லை.
நீர்நிலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆற்றங்கரையோரம் பாதுகாப்பு இல்லாமல் வாழும் மக்களுக்கு மாற்று இடம் வழங்குவது தான் பாதுகாப்பானதும் கூட. ஆனால், அவர்களுக்கு ஒதுக்கப்படும் மாற்று இடம் பாதுகாப்பானதாகவும், எளிதில் வாழ்வாதாரம் தேடக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு ஆகும். எனவே, அடையாற்றின் கரைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு அவர்கள் ஏற்கனவே வசித்த பகுதியிலிருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் மாற்று இடம் வழங்கப்பட வேண்டும்.
அதேபோல், நீர்நிலைகளில் இருந்த குடிசைகளை மிகவும் எளிதாக அகற்றிவிட்ட தமிழக அரசு, நிகழ்கால மற்றும் கடந்த கால ஆளுங்கட்சி ஆதரவுடன் ஏரிகளையும், குளங்களையும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட மாட மாளிகைகளையும், வணிக நிறுவனங்களையும், கல்விக் கடைகளையும் அகற்ற என்ன திட்டம் வைத்திருக்கிறது? என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். ‘ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி' என்பதைப் போல ஏழைகளின் குடிசைகளை அகற்றிவிட்டு பணம் படைத்தவர்களின் ஆக்கிரமிப்புகளை பாதுகாக்க அரசு முயன்றால் மக்கள் மன்னிக்கவே மாட்டார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு












Click it and Unblock the Notifications