'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள்
மின்கம்பி உரசி யானை பலியாகியுள்ள நிலையில், அரசின் வழிகாட்டுதல்கள்ஏன் பின்பற்றப்படவில்லையென சூழலியலாளர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்
தருமபுரி: தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசி தருமபுரியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுவழங்கிய வழிகாட்டுதல்கள் ஏன் பின்பற்றப்படவில்லையென்று சூழலியலாளர்கள்
கேள்வியெழுப்பி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 494 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இதில் சோகம் என்னவெனில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 யானைகள் இந்த காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி மட்டுமே உயிரிழந்துள்ளன. கிட்டதட்ட மாதம் ஒரு யானையை நாம் மின்சாரம் மூலம் கொன்று குவிக்கிறோம் என்பதைதான் இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த வாரம் மத்திய அரசால் வெளியிடப்பட்ட இந்த புள்ளிவிவரத்தின் அதிர்ச்சி குறையும் முன்னர் ஓரிரு நாட்களாக நடந்து வரும் சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தருமபுரி மாவட்டத்தின் பாலக்கோடு வனச்சரகத்திற்கு உட்பட்ட மரண்டஹல்லி காப்புக்காட்டிலிருந்து ஒரு இரண்டு பெண் யானைகள் மற்றும் இரண்டு குட்டிகளுடன் ஒரு மக்னா யானை வெளியேறியது. இந்த யானைகள்
உணவு தேடி ஆத்துக்கொட்டாய், நல்லூர் மற்றும் சென்னப்பன் கொட்டாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்தன. அங்கிருந்த பயிகளை சாப்பிட்டவாறு மேலும் உணவு தேடி
அலைந்துகொண்டிருந்தன.

மின்வேலி
இதனையடுத்து ஊர் மக்கள் வனத்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளனர். புகாரின்அடிப்படையில் வனத்துறையினர் உடனடியாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லைஎன்று சொல்லப்படுகிறது. இதனையடுத்து ஊர் மக்களே யானையை விரட்டும் பணியில்ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் வனத்துறையினர் வந்துயானைகளை விரட்ட முயன்றனர். யானைகளும் அங்கிருந்து மெல்ல நகர்ந்தது. ஆனால்சிறிது தூரத்தில் சென்ற உடன் மூன்று யானைகளும் சட்டென சரிந்துவிழுந்தன.இந்த மூன்று யானைகளும் விவசாய தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலையில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தன.

யானைகள்
யானைக்கு அபார நினைவு திறன் உண்டு. அவை சிறுவயதில் உணவு தேடி தனதுகூட்டத்துடன் வந்த பாதைகளை சாகும் வரை மறக்காது. ஆனால் பிரச்னை என்னவெனில்இந்த யானைகள் வளர்ந்த பின்னர் இதே பாதையை நினைவில் வைத்து வரும்போது அதைமனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்து வைத்துவிடுகிறான். மட்டுமல்லாது தங்களுடையஇடத்திற்கு யானை வந்துவிட்டது என விரட்டியடிக்கிறான். இதில் மின்வேலி வேறு.இப்படிதான் எதையும் அறியாமல் வரும் யானைகள் உயிரிழக்கின்றன.மேற்குறிப்பிட்ட சம்பவத்தில் தனது பெற்றோரை இழந்த இரண்டு குட்டியானைகளும்சில மணி நேரம் வரை அந்த இடத்தை விட்டு நகரவே இல்லை.

மற்றொரு யானை
வனத்துறையினர் பட்டாசு வெடித்து சத்தம் எழுப்பிய பின்னர்தான் அந்தகுட்டிகள் அங்கிருந்து நகர்ந்தன. இதனையடுத்து இன்று காலை இதே தருமபுரிபாப்பாரப்பட்டி காப்புக்காட்டிலிருந்து வந்த ஆண் யானை ஒன்று கெலவள்ளிகிராமத்தில் சுற்றித் திரிந்துள்ளது. வனத்துறையினர் யானையைகாட்டுப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர். அப்போது ஒரு ஏரியின் வரப்பில் ஏறும்போது தாழ்வாக இருந்த தொங்கிக்கொண்டிருந்த மின்சார கம்பி நெற்றியில்உரசியதில் சம்பவ இடத்திலேயே அந்த யானை உயிரிழந்தது. காடுகளை உருவாக்க ஒருயானை கூட்டம் போதுமானது. காடுகள் மனிதர்களை பிழைக்க வைக்கும். ஆனால் எந்தமனிதனாலும் ஒரு யானை கூட்டத்தை ஒருபோதும் உருவாக்கவே முடியாது.

கேள்வி
அந்த வகையில் இச்சம்பவம் குறித்து சூழலியல் ஆர்வலர்கள் தங்களதுகண்டனத்தை தெரிவித்துள்ளனர். அதேபோல காட்டுயிர் பாதுகாப்பு குறித்து அரசு வழங்கியவழிக்காட்டுதல்கள ஏன் பின்பற்றவில்லை என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர்.அதாவது, "Eco-Friendly Measures to Mitigate Impacts of Power Transmissionlines and other Power Transmission Infrastructures on Elephants andother Wildlife எனும் வழிகாட்டுதலில் யானை நடமாடும் பகுதியில் உள்ள மின்கம்பிகளை காப்பிடப்பட்ட வடங்களாக மாற்ற வேண்டும் என மத்திய அரசின் வனத்துறைவழிகாட்டியிருந்தது. இந்த வழிகாட்டுதல்களை ஏன் மாநில அரசு பின்பற்றவில்லை?"என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.

என்ன செய்ய வேண்டும்
மேலும், "யானைகள் மட்டுமல்லாது மற்ற எந்த காட்டுயிரனங்கள் நடமாடும்பகுதியாக இருந்தாலும் அந்த பகுதியில் உள்ள மின் கம்பிகளை பூமிக்கு அடியில்அமைக்க வேண்டும். மின்சாரம் தாக்கி காட்டுயிரினங்கள் உயிரிழப்பதை தடுக்கவனத்துறை செயலர், வனத்துறை தலைவர், முதன்மை தலைமை காட்டுயிர் பாதுகாவலர்,மின்சாரத்து மற்றும் வனத்துறை மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவை கட்டாயமாகஅரசு உருவாக்க வேண்டும் என்று வழக்கு ஒன்றில் தென்மண்டல தேசிய பசுமைதீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் காட்டுயிரினங்கள்செல்லும் பகுதியில் உள்ள மின் கம்பிகள் தொட்டாலும் ஷாக் அடிக்காதவாறுஅக்கம்பிகளை ABC எனப்படும் Aerial Bunched Cables வடங்களாக மாற்ற வேண்டும்என்றும் கூறப்பட்டுள்ளது. இதனை கடைப்பிடித்திருந்தால் இந்த உயிரிழப்புஏற்பட்டிருக்காது" என்று சூழலியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications