மோடியின் மாஸ்டர்பிளான்.. ஓய்வூதியத்தில் வர இருக்கும் மிகப்பெரிய மாற்றம்.. நல்லதா? கெட்டதா?
சென்னை: அரசு மற்றும் தனியார் ஊழியர்களின் ஓய்வூதியத்தில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.
மத்திய அரசின் EPFO அமைப்புதான் ஊழியர்களின் பென்சன் கணக்குகளை நிர்வகித்து வருகிறது. ஊழியர்களுக்கு எப்படி பென்சன் கொடுக்க வேண்டும் என்பதற்கான விதிகளை வகுப்பது இவர்கள்தான்.
இந்த நிலையில் இந்த விதிகளில் இவர்கள் முக்கிய மாற்றங்களை செய்ய உள்ளார்களாம். தற்போது பயன்படுத்தப்படும் பாரம்பரிய விதியை மாற்ற இவர்கள் ஆலோசனை செய்து வருகின்றனர். இப்போது இருக்கும் விதிப்படி ஒருவர் வாங்கும் வருமானத்தில் கடந்த 60 மாதங்கள் பெற்ற சராசரி வருமானத்தாய் அவர்களின் பென்சன் சர்வீஸ் மூலம் பெருக்கி அதை 70 ஆல் வகுக்கும் முறை உள்ளது.

ஆனால் இதை மாற்ற உள்ளனர். புதிய விதிக்கப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும்.
உதாரணமாக இப்போது இருக்கும் முறைப்படி கடந்த 60 மாதங்களில் உங்கள் வரும் 80 ஆயிரம் மற்றும் பென்சன் 32 வருடங்கள் என்று வைத்துக்கொள்வோம். 80,000 ஐ 32 ஆள பெருக்கி 70 ஆல் வகுக்க வேண்டும். பென்சன் தொகை 36,571 ரூபாய் வரும்.
புதிய முறைப்படி வெறும் 60 மாத வருமானத்தின் சராசரியை மட்டும் கணக்கிடாமல் மொத்தமாக அவர்கள் வேலை பார்த்த அனைத்து வருடத்தின் சராசரி சம்பளம் எடுக்கப்படும். இதனால் தொடக்க காலங்களில் நீங்கள் வாங்கிய 30, 40 ஆயிரம் வருமானத்தையும் வைத்து சராசரி கணக்கீடு செய்வார்கள்.
அப்படி செய்யும் பட்சத்தில் உங்களின் பென்சன் தொகை கணிசமாக குறையும். இந்த புதிய பென்சன் கணக்கீட்டு முறையைத்தான் கொண்டு வர மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் இபிஎப்ஓ ஆலோசனை செய்து வருகிறதாம்.
இது இன்னும் அமலுக்கு வரவில்லை. தற்போதைக்கு பரிசீலனையில்தான் உள்ளது.
மோடி பிளான்:இது போக மத்திய அரசு பணியாளர்களுக்கு பிரதமர் மோடி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2023ம் வருடம் தெலுங்கானா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்க உள்ளன. கர்நாடக தேர்தல் காரணமாக வரப்போகும் இந்த தேர்தல்களில் வெற்றிபெறுவதற்கான தீவிரமான பணிகளை பாஜக அரசு செய்ய தொடங்கிவிட்டது.
இந்த தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு முக்கிய அறிவிப்புகள், நலத்திட்டங்கள் மத்திய பாஜக அரசு மூலம் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்புகள் சிலவற்றை மத்திய பாஜக அரசு வரும் நாட்களில் வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கியமான ஒரு அறிவிப்பை மத்திய பாஜக அரசு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மத்திய அரசு ஊழியர்களின் வருமானம் பெரிய அளவில் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மீண்டும் அகவிலைப்படி உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் கூட தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் மாநில அரசு பணியாளர்களுக்கு 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படியே மத்திய அரசு ஊழியர்களுக்கும் மார்ச் மாதம் 23ம் தேதி அகவிலைப்படி 4 சதவிகிதம் வரை உயர்த்தப்பட்டது.

அதுவரை 38% ஆக இருந்தது 42 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. 7வது ஊதியக்குழுவின் படி ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.
அடுத்த கட்ட அகவிலைப்படி உயர்வு பெரும்பாலும் இன்னும் 2 மாதங்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் முன்கூட்டியே.. அதாவது ஜூன் மாத இறுதியிலேயே இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.
இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications