திருவாரூர் அருகே மூதாட்டி கொலை.. கைதான அதிமுக ஐடி விங் நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்!
திருவாரூர்: திருவாரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் கைதான அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள வெட்டிக்காடு எனும் ஊரைச் சேர்ந்த மூதாட்டி முத்துலட்சுமி. இவருக்கு வயது 85. கணவரை இழந்த இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பாபு. இவர் அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவருடைய தாய் மலர்க்கொடி.

ஆடுகளைக் தோட்டத்தில் கட்டுவது தொடர்பாக மலர்க்கொடிக்கும், மூதாட்டி முத்துலட்சுமிக்கும் இடையே மோதல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மீண்டும் ஏற்பட்ட தகராறில் முத்துலெட்சுமி மூதாட்டியை அதிமுக திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாய் மலர்கொடி ஆகியோர் கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த முத்துலெட்சுமி, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதையடுத்து, மன்னார்குடி காவல்துறையினர் ஆனந்த் பாபு மற்றும் அவரது தாயார் மலர்க்கொடி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆனந்த் பாபுவை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆனந்தபாபுவின் தாயார் மலர்க்கொடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆடு கட்டும் பிரச்சனையில் மூதாட்டியை கட்டையால் தாக்கி கொலை செய்த வழக்கில் கைதான அதிமுக ஐடி விங் மாவட்ட நிர்வாகி ஆனந்த் பாபுவை கட்சியில் இருந்து நீக்கி, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், சி. ஆனந்தபாபு, (திருவாரூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவு இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை!












Click it and Unblock the Notifications