நாங்க கூப்பிட்டுட்டுத்தான் இருக்கோம், அவங்கதான் வர மாட்டேங்குறாங்க.. சி.வி. சண்முகம்
இரு அணிகள் இணைப்பு குறித்து பேச்சுவார்த்தைக்கு அதிமுக அம்மா அணி தயாராக இருப்பதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் வரவில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணி மற்றும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக ஒன்றுபட்டு செயல்படலாம் என்று முடிவு செய்து இரண்டு கோஷ்டிகள் சார்பிலும் கடந்த வாரம் 7 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து ஏப்ரல் 24ம் தேதியே இரு அணிகளும் கூடிப் பேசி இணைப்பு முயற்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் இரு தரப்பு அதிகாரப்பூர்வமாக நேரில் சந்தித்து பேசியதாக எந்தத் தகவலுமே இல்லை. பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளது, விரைவில் பேச்சுவார்த்தை என்று கூறியவர்கள், இனி பேச்சுவார்த்தையே இல்லை என்பது போல நேற்றைய மே தின விழாவில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு அமைந்திருந்தது.
இக்கட்டான சூழலில் அதிமுக உள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்மும் சென்னையில் இன்று தெரிவித்துள்ளார். எங்கள் அணி சார்பில் பேச்சுவார்த்தைக்கு பல முறை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அணி வரவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்திற்கும், பேச்சுவார்த்தைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம், அவ்வளவு தான் என்றும் திட்டவட்டதாக தெரிவித்தார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications