சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்கும் உரிமை சரத்குமாருக்கு இல்லை: எம்.எல்.ஏ. நாராயணன் அதிரடி
சென்னை: அகில இந்தி சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு சரத்குமாருக்கு உரிமை இல்லை என்று அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.
கட்சி விதிகளை மீறியதால் எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார் என்று அக்கட்சியின் தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார்.

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்கள் மன்றத்தில் பேசிய எர்ணாவூர் நாராயணன், சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து என்னை நீக்கியது சட்டப்படி செல்லாது. என்னை கட்சியிலிருந்து நீக்கும் உரிமை சரத்குமாருக்கு இல்லை எனவும் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் அதிமுகவிற்கு எதிராக எம்.எல்.ஏ பதவியில் இருந்து என்னை ராஜினாமா செய்யச்சொன்னார். நம்ம சமுதாயத்திற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தது அதிமுக. அதனால், அதிமுகவிலிருந்து வெளியேறக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். மேலும், பாஜக, திமுக ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே என்னை கட்சியை விட்டு சரத்குமார் நீக்கினார் என்று குற்றம்சாட்டினார்.
மாவட்ட செயலாளர்களில் 20 பேர் என்னை ஆதரிக்கிறார்கள். அதனால், சரத்குமாருக்கு எதிராக போட்டி பொதுக்குழுவை கூட்டுவேன் என்றும் தெரிவித்தார். இதையடுத்து, எர்ணாவூர் நாராயணன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால் அதை சந்திக்க தயார் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications