கோயில் திருவிழாவுக்கு அழைத்துப் போக மறுத்த கணவர்... குழந்தையுடன் மனைவி தற்கொலை: வீடியோ
கோயில் திருவிழாவுக்கு தன்னையும் குழந்தையையும் அழைத்துப் போகவில்லை என்கிற கோபத்தில் மனைவி கிணற்றில் குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பர்கூரில் நடைபெற்றுள்ளது.
ஈரோடு: பர்கூரில், கணவர் தன்னை திருவிழாவுக்கு அழைத்துச் செல்லவில்லை என்கிற ஆத்திரத்தில் மனைவி குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பர்கூரை அடுத்துள்ள ஒண்ணக்கரை என்ற ஊரில் வசித்து வருபவர் பிரகாஷ். இவருக்கும் இவரது மனைவி விஜயாவுக்கும் ஊரில் நடக்கும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்வது குறித்து தகராறு எற்பட்டுள்ளது.

அப்போது பிரகாஷ் தன் மனைவியையும் குழந்தைகளையும் திருவிழாவுக்கு அழைத்துச் செல்ல மறுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமும் வேதனையும் அடைந்த விஜய தன் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குழந்தையுடன் குத்தித்து தற்கொலை செய்துகொண்டதில் இருவரும் அநியாயமாக உயிர் இழந்தனர். அவர்களது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications