பள்ளி மாணவியைச் சிதைத்த எஸ்டேட் ஊழியர் - கொல்லிமலையில் கைது
நாமக்கல்: கொல்லிமலையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக எஸ்டேட் தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தின்னனூர்நாடு சேத்துபலாப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் இளவரசன். அங்குள்ள எஸ்டேட் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது உறவுக்கார சிறுமி சேளூர்நாடு கண்ணங்குலம் பட்டியை சேர்ந்தவர். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கமாக பள்ளி வகுப்பு மற்றும் சிறப்பு வகுப்புகளை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு வீடு திரும்பு வது வழக்கம்.

நேற்று முன்தினம் வகுப்புகளை முடித்து விட்டு, பள்ளி முன்பு பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இளவரசன், தான் கண்ணங்குலம்பட்டிக்கு செல்வதாகவும், அந்த சிறுமியை வீட்டில் விட்டு விடுவதாகவும் கூறி உள்ளார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த அந்த சிறுமி அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி அமர்ந்து சென்று உள்ளார். அப்போது அங்குள்ள அரக் கல்பட்டி காட்டு பகுதியில் வைத்து, அந்த சிறுமியை இளவரசன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, வாழவந்திநாடு போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications