நாகையில் இளைஞரின் ஈவ் டீசிங் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட மாணவி: போலீஸார் விசாரணை
நாகையில் பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தொடர்ந்து ஈவ் டீசிங் தொல்லை கொடுத்து வந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாகை: திருமணம் செய்து கொள்வதாக தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த இளைஞரால் நாகை மாவட்டத்தில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு கிராமம் இளந்தோப்பு தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகள் மீனாட்சி. இவர் திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

கடந்த சில நாட்களாக மீனாட்சி பள்ளிக்கு செல்லும் போது அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அந்த இளைஞர் மீனாட்சியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
மாணவி கடுமையாக மறுத்து வந்துள்ளார். ஆனால் இளைஞர் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால் மாணவி மீனாட்சி மனவேதனை அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இளைஞரின் தொடர் தொல்லையால் அதிர்ச்சி அடைந்து இருந்த மாணவி இதை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மீனாட்சி தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து மீனாட்சியின் தந்தை ரமேஷ் புதுப்பட்டினம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் மீனாட்சியின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவியின் இந்த தற்கொலை சம்பவம் நாகை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications