அமைச்சர் நாராயணசாமி காரில் வெடிகுண்டு: டெலிபோன் பேச்சு ஆதாரம் சிக்கியது
புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் காரில் பைப் குண்டு கண்டெடுக்கப்பட்ட விவகாரம் தொடர்பான டெலிபோன் ஆதாரங்களை தேசிய புலனாய்வு படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் நாராயணசாமியின் வீடு புதுவை எல்லையம்மன் கோவில் வீதியில் உள்ளது. கடந்த மாதம் 29-ந் தேதி அவரது வீட்டில் கார் அருகே பைப் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது வெடிப்பதற்கு முன்பாக போலீசார் கைப்பற்றி அகற்றினார்கள்.

அந்த வெடிகுண்டை சென்னையில் இருந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்க செய்தனர். அது மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பைப் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்துத்து கடந்த 1ம் தேதி புதுவையில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் அமைச்சர் நாராயணசாமியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் படை கமாண்டட் அதிகாரி ஒருவர் ஞாயிறன்று புதுவை வந்தார். அவர் நாராயணசாமிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார். பின்னர் நாராயணசாமியை சந்தித்து இது சம்பந்தமாக நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார்.
இதனிடையே பைப் வெடிகுண்டு வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு படையை புதுவை அரசு கேட்டுக்கொண்டது. அதை ஏற்று தேசிய புலனாய்வு படையினர் விசாரித்து வந்தனர். ஒரு வாரமாக புதுவையிலேயே முகாமிட்டு அவர்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினார்கள்.
குண்டு வைக்கப்பட்ட தினத்துக்கு முந்தைய சில நாட்களில் இருந்து அன்றைய தினம் வரை புதுவையில் இருந்து வெளியூருக்கு பேசப்பட்ட டெலிபோன்கள் பற்றி ஆய்வு செய்தனர்.
பி.எஸ்.என்.எல். மற்றும் அனைத்து தனியார் டெலிபோன் நிறுவனங்களிலும் இந்த ஆய்வு நடந்தது. அதில் சந்தேகப்படும்படி இருந்த சில டெலிபோன் எண்களை ஆய்வு செய்தனர். அதில் நாராயணசாமி வீட்டில் குண்டு வைத்தவர்கள் டெலிபோனில் உரையாடிய ஆதாரம் கிடைத்துள்ளது. அதை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வெடிகுண்டுக்குள் இருந்த ஜெலட்டின் குச்சிகள் எந்த வகையை சேர்ந்தவை, அவை எந்த பகுதியில் தயாரிக்கப்படுபவை போன்ற விவரங்களை சேகரித்தார்கள். அதிலும் முக்கிய துப்பு கிடைத்துள்ளது. இவற்றை வைத்து குண்டு வைத்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என தேசிய புலனாய்வுப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications