அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து 'வாங்க போராடலாம்..': அனைத்து கட்சிகளுக்கு ஈ.வி.கே.எஸ். அழைப்பு!!
சென்னை: அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட அனைத்து கட்சிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழைப்பு விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களுக்கு இன்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி:

அ.தி.மு.க. அரசு நல்லாட்சியை தருவதாக கூறி ஆட்சிக்கு வந்தது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக லஞ்ச லாவண்ய ஆட்சியைத் தான் கொடுத்து வருகிறது. லஞ்சம் இல்லாத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது.
ஆட்சி கலைப்புகள் முன்னுதாரணம்
ஒரே ஒரு குற்றச்சாட்டுக்காக ஒரு அமைச்சர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள், ஊழல் புகார் பட்டியல் கொடுப்பது புதிதல்ல. பல மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் கொடுத்த ஊழல் புகார் பட்டியல் மீது ஆளுநர்கள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். ஆட்சிகள் கலைக்கப்பட்ட வரலாறும் உண்டு.
நாங்கள் கொடுத்த ஊழல் புகார் மீது ஆளுநர் தக்க நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம். அதற்காக கால அவகாசத்தை கொடுப்போம். ஒருவேளை நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்.
தமிழகத்தில் பல அமைச்சர்கள் சிறைக்கு போவார்கள். அப்போது நாங்கள் கூறிய புகார்களுக்கான அடிப்படை ஆதாரங்கள் என்ன என்பது தெரிய வரும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
கட்சிகளுக்கு அழைப்பு
காங்கிரசைப் போன்று தி.மு.கவும் ஊழல் பட்டியல் கொடுக்க இருப்பதாக மு.க ஸ்டாலின் கூறி இருக்கிறாரே என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு இதனை நல்ல விஷயம் என்று குறிப்பிட்ட ஈ.வி.கே.எஸ். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து அ.தி.மு.க. அரசின் ஊழலை எதிர்த்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications