'மன்னிப்பு கேட்க மாட்டேன்'.. இது இளங்கோவன்: 'பேசியதில் தவறில்லை'.. இது குஷ்பு
சென்னை: பிரதமர் - முதல்வர் சந்திப்பு பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை எனவே நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் உருவ பொம்மையை அதிமுகவினர் கொளுத்தினர். இளங்கோவனுக்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மன்னிப்பு கேட்க மாட்டேன்
இதனிடையே இந்த போராட்டம் குறித்து கருத்து கூறியுள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், தான் பேசியதில் தவறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். மூன்று நாட்களுக்கு முன்னர் பேசிய பேச்சிற்கு இப்போது போராட்டம் நடத்துவது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், அதிமுகவினரின் போராட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது என்றார். தான் ஒருபோதும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் அராஜகம்
அதிமுகவினரின் போராட்டம் குறித்து கருத்து கூறியுள்ள காங்கிரஸ் மகளிர் அணித்தலைவி விஜயதாராணியோ, பாஜக - அதிமுக இடையே ரகசிய உறவு எதற்கு? பகிரங்கமாக கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டியதுதானே என்றுதானே ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கேட்டார். இதில் தவறு என்ன இருக்கிறது என்று கேட்டார்.

குஷ்பு கண்டனம்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் போராடுவது ஜனநாயகத்திற்கு விரோதமானது. அதிமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தலைவர் இளங்கோவன் ஆளுனரிடம் அளித்துள்ளார். அதை மறைக்கவே அதிமுகவினர் போராடுகின்றனர் என்றார்.

தவறு இல்லையே
ஜெயலலிதா அம்மையார் பற்றியும், பிரதமர் மோடி பற்றியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியதில் தவறு ஏதுமில்லை என்று கூறிய குஷ்பு, அதிமுகவினர் உருவபொம்மைகளை எரிப்பதை போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications