பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜாவை கைது செய்யுங்கள்.. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தல்
பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
ஈரோடு: பெண் அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா மீது தர்மபுரி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரியாக இருக்கும் ராஜமீனாட்சி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

பணியிட மாறுதலுக்கு ரூ. 20 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும் பணியில் நீடிக்க வேண்டும் என்று விரும்பினால் ரூ.30 லட்சம் தரவேண்டும் தரவேண்டும் என்று அமைச்சர் சரோஜா மற்றும் அவரது கணவர் மிரட்டல் விடுத்தாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார் ராஜமீனாட்சி.
இதையடுத்து அமைச்சர் சரோஜாவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அரசு பெண் உயர் அதிகாரியை தமிழக அமைச்சர் சரோஜா ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டு மிரட்டி உள்ளார். இந்த ஆட்சியில் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை.
அமைச்சரால் மிரட்டப்பட்ட பெண் அதிகாரிக்கும் அவரது குடும்பத்துக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். அதிகாரியை மிரட்டிய அமைச்சர் சரோஜா மீது வழக்கு போட்டு அவரை கைது செய்ய வேண்டும் என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications