முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவர் ஜெயலலிதா... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தாக்கு
தென்காசி: முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவர் ஜெயலலிதா என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
தென்காசியில் நடந்த திருமண விழா ஒன்றில் கலந்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வந்தார். பின்னர் நிருபர்களை சந்தித்தார்.

அவர்களிடம் இளங்கோவன் பேசுகையில், கோலாலம்பூரில், இந்திய பிரதமர் மோடி மலேசிய நாட்டு பிரதமரோடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இந்தியாவின் தேசிய கொடி தலை கீழாக இருந்ததை கண்டு எதுவும் கூறாமல் அதை உடனடியாக சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடாமல் இருந்தது மிகவும் வருத்தத்திற்குரியது.
தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வந்த மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன், நிர்மலா சீதாராமன் ஆகியோர் கூறுகையில் தமிழகத்தில்உள்ள பாதிப்புகள் குறித்தும், தேவையான நிவாரணங்கள் குறித்தும் மத்திய அரசிடம் இதுவரை எந்த விதமான உதவிகளையும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
தமிழக மக்கள் படும் கஷ்டங்கள், துயரங்கள் பொருட் சேதம் குறித்த தகவலும் தெரிவிக்கவில்லை இந்த மாநில அரசு. இன்று மக்கள் 10 நாட்களாக கஷ்டங்களையும், வேதனைகளையும் சந்தித்து வருகிறார்கள். ஆனால் முதல்வர் இதுவரை மத்திய அரசை வெள்ள சேதங்கள் குறித்த எந்த உதவிகள் தேவை என்பது குறித்து கேட்கவில்லை என்பது ஜெயலலிதாவின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது.
ஜெயலலிதா முதல்வராக இருப்பதற்கே லாயக்கற்றவராக இருக்கிறார். இந்தியா இதுவரை இவரைப்போன்ற முதல்வரை கண்டதில்லை என்றார் அவர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications