சசிகலாவை வெளியே கொண்டுவந்து விசாரிங்க.. தினகரனை கைது செய்யுங்க.. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆவேசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், நகைகள்,பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

EVKS Elangovan urged Income tax officers should inquire Sasikala

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது
சசிகலா உறவினர்களின் இல்லத்தில் நடந்த வருமானவரி சோதனையில் அரசியல் எதுவுமில்லை என்று அவர் கூறினார்.

சிறையில் இருந்து சசிகலாவை வெளியில் கொண்டு வந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். வருமானவரித்துறையின் ஒட்டு மொத்த சோதனைக்கும் சசிகலாதான் முதல் குற்றவாளி என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

டிடிவி தினகரனை வெளியில் விட்டதே தவறு என்று கூறிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தினகரனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வலியுறுத்தினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
EVKS Elangovan urged Income tax officers should inquire Sasikala. He said Sasikala is first accused of this raid.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற