நடிகர் ரஜினிக்கு 4 நாட்களுக்கு பிறகு பதில் கொடுத்த விஜய்.. எல்லாம் பிளான் தானா?
சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய்க்கு நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட சோசியல் மீடியா போஸ்ட்க்கு நான்கு நாட்கள் கழித்து விஜய் பதில் கொடுத்திருக்கிறார். இதுதான் இப்ப சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த இந்த நிகழ்வு, பழைய சர்ச்சைகளையும் மீண்டும் பேசுபொருளாக மாற்றியுள்ளது.

108 தொகுதிகளில் விஜய் வெற்றி
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சி, சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதலமைச்சராக பதவியேற்றது, தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
திரைப்பட நடிகராக இருந்தவர் நேரடியாக அரசியலில் களமிறங்கி, இவ்வளவு விரைவில் இந்த அளவுக்கு வெற்றி பெற்றிருப்பது, அவருடைய மக்கள் ஆதரவை வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
ரஜினியின் வாழ்த்து
இந்த வெற்றிக்கு ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து, "தமிழக மக்கள் நலனுக்காக நல்லாட்சியை வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதற்கு உடனடியாக பதில் அளிக்காத விஜய், சுமார் நான்கு நாட்கள் கழித்து தான் தனது பதிலை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட பதிவில், "சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களின் அன்பான வாழ்த்துகளுக்கு மனமார்ந்த நன்றி" என தெரிவித்திருந்தார். இந்த தாமதமான பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பழைய பிரச்சனை
விஜய் மற்றும் ரஜினிகாந்த் இடையே நேரடி மோதல் இல்லாதபோதிலும், ரசிகர்கள் மத்தியில் நீண்டகாலமாக ஒரு போட்டி நிலவி வருகிறது.
ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசப்பட்ட "காக்கா - கழுகு" கதை முதல், அரசியல் பேச்சுகளில் வெளிவந்த மறைமுக குற்றச்சாட்டுகள் வரை பல சம்பவங்கள் இந்த போட்டியை அதிகரித்தன.
ஆதவ் அர்ஜுனா பேச்சு
தேர்தல் பிரச்சாரத்தின் போது, விஜய் கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் குறித்து பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது "ரஜினி சார் அரசியலுக்கு வந்து முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் சில அரசியல் சூழ்நிலைகளால் அவர் பின்வாங்கினார். ஆனால் விஜய் தைரியமாக அரசியலுக்கு வந்திருக்கிறார்" என்று பேசி இருந்தார்.
இந்த பேச்சு, "ரஜினிக்கு தைரியம் இல்லை என்று சொல்லுகிறார்களா?" என்ற கேள்வியை எழுப்பியது. இதனால் ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரஜினி அறிக்கை
இந்த சர்ச்சை பெரிதாகிய நிலையில், ரஜினிகாந்த் தரப்பில் இருந்து ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், தன்னைப் பற்றிய தவறான புரிதல்கள் பரவாமல் இருக்க வேண்டும் என்றும், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறியிருந்தார்
இந்த அறிக்கை வந்த பிறகும், சமூக வலைதளங்களில் விவாதங்கள் குறையவில்லை.
ரசிகர்கள் கடும் எதிர்ப்பு
இந்த விவகாரம் ரசிகர்கள் மட்டுமின்றி, தொண்டர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிலர், "விஜய் கட்சிக்கு எதிராகவே நாங்கள் நிற்போம்", "அவருக்கு ஓட்டு போடக்கூடாது" என்று வெளிப்படையாக கருத்து தெரிவித்தனர். சமூக வலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இடையே கடும் வார்த்தைப் போராட்டமும் நடந்தது.
ரசிகர்கள் கருத்து
இந்த நிலையில் தற்போது பழைய விஷயங்களை எல்லாம் மறந்து ரஜினி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார் ஆனால் விஜய் பதில் அளிக்க தாமதித்தது குறித்து பல்வேறு கருத்துகள் வெளியானது. சிலர், "அரசியல் பொறுப்புகளில் பிஸியாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்" எனக் கூறினர்.
மற்றவர்கள், "இதற்கு பின்னால் ஏதேனும் அரசியல் கணக்கு இருக்கிறதா?" என்றும் கேள்வி எழுப்பினர். ஆனால், இறுதியில் அவர் மரியாதையுடன் பதில் அளித்ததால், பெரிய சர்ச்சை உருவாகாமல் தடுக்கப்பட்டதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
புதிய கட்டம்
விஜய் அரசியலுக்கு வந்த பிறகு, அவரது ஒவ்வொரு செயலும் அரசியல் நோக்கில் பார்க்கப்படுகிறது. அதேபோல், ரஜினிகாந்த் முன்பு அரசியலுக்கு வருவதாக கூறி பின்னர் விலகியதும் இப்போது மீண்டும் ஒப்பீடாக பேசப்படுகிறது.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
ஃப்ரண்ட்ஸ் இப்போ என்னாச்சுன்னா.. போலீஸ் ஸ்டேஷனையும் விடாத தவெகவினர்.. ரீல்ஸ் அலப்பறையால் அலறும் காவலர்கள் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?











Click it and Unblock the Notifications