வன்முறையை வன்முறையால் சந்திப்போம்: வாசன் அன்ட் கோவுக்கு ஈ.வி.கே.எஸ். எச்சரிக்கை
சென்னை: வாசன் ஆதரவாளர்கள் வன்முறையை கையில் எடுத்தால் அதை வன்முறையால் சந்திப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

பிரிந்து சென்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை எதுவும் இல்லை. அவர்கள் தங்களுக்கு என்று ஒரு பாதையை தேர்வு செய்து செல்கின்றனர். அதன் முடிவை பற்றி எங்களுக்கு கவலை இல்லை.
ஆனால் பிரிந்து சென்றவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவது சரியல்ல. எங்களுக்கு வன்முறையில் நம்பிக்கை இல்லை என வாசன் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சக்கரபாணி ரெட்டியாரின் காரை தாக்கியிருக்கிறார்கள் வெளியேறியவர்களில் சிலர். இனியும் இதுபோன்று எதுவும் நடக்காமல் வாசன் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் வன்முறை தொடர்ந்தால் வன்முறையை வன்முறையால் சந்திப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. கட்சியில் இருந்து வெளியே சென்றவர்கள் அநாகரீக செயல்களில் ஈடுபடக் கூடாது. மீறி ஈடுபட்டால் நாங்களும் அதில் ஈடுபட வேண்டும் என்பதை உணர்ந்து அவர்கள் நாகரீகமாக நடக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications