இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது நம் கடமை- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
சென்னை: இந்தியாவை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய கடமை காங்கிரஸ்க்கு இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி 60 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியம், அகிம்சை கொள்கைகளின் அடிப்படையில் சத்தியாகிரகம், ஒத்துழையாமை ஆகிய போராட்ட திட்டங்களை கடைப்பிடித்து 1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது.

இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு அவர்கள் பொறுப்பேற்று நவபாரதத்தை உருவாக்க அடித்தளம் அமைத்தார். சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. உலகத்தின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்திருக்கிறது. இந்தியாவை 55 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வளர்த்தெடுத்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கு உண்டு. இந்தியாவில் மக்கள் பார்க்கிற வளர்ச்சியை ஏற்படுத்தியதில் பெரும்பங்கை காங்கிரஸ் கட்சி வகித்தது என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.
விடுதலைப் போராட்ட காலத்திலும், அதற்குப் பின்பும், இந்திய மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள். மதச்சார்பற்ற கொள்கையை கடைப்பிடித்து மதநல்லிணக்கத்தை உருவாக்குகிற காங்கிரஸ் கட்சியின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுகிற பணியை மதவாத சக்திகள் செய்து வருகின்றன. இவற்றை எதிர்கொண்டு வென்றெடுக்க வேண்டிய இமாலயப் பணி தேசிய சக்திகளுக்கு இருக்கிறது.
சுதந்திர இந்தியா காணாத அச்சுறுத்தல் மதவாத அடிப்படையில் தேசிய அளவில் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இந்த பேராபத்திலிருந்து இந்தியாவையும், மக்களையும் பாதுகாத்து முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல வேண்டிய மகத்தான பொறுப்பும், கடமையும் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதை நிறைவேற்றுவதற்கு இந்திய மக்கள் துணை புரிவார்கள் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான சுதந்திரதின வாழ்த்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications