அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டாரா? ஈவிகேஎஸ் இளங்கோவன் பகீர்!
அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு போய்விட்டாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: அமைச்சர் சரோஜா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டாரா என காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார். சரோஜா மீது புகார் கொடுத்த பெண் அதிகாரி ராஜ மீனாட்சியும் திடீரென மாயமாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா லஞ்சம் கேட்பதாக தருமபுரி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ராஜ மீனாட்சி குற்றம்சாட்டினார். மேலும் தகாத வார்த்தைகளால் பேசிய அமைச்சர் சரோஜா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைச்சர் சரோஜாவை பதவி நீக்கம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மறுத்த சரோஜா
இதையடுத்து ஒரு வாரத்திற்குப் பிறகு ஆரஅமர அறிக்கை விட்ட சரோஜா தன் மீதான குற்றாட்டுகள் பொய்யானது. ராஜமீனாட்சி யார் என்றே தனக்கு தெரியாது என்றார்.

எங்கே போனார் சரோஜா?
இதன் பின்னர் அமைச்சர் சரோஜா மற்றும் அதிகாரி ராஜ மீனாட்சி குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. அரசு விழாக்களிலும் அமைச்சர் சரோஜாவை காணமுடியவில்லை எனக்கூறப்படுகிறது.

வெளிநாட்டுக்கு தப்பிவிட்டாரா?
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அமைச்சர் சரோஜாவை காணவில்லை. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று விட்டாரா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அதிகாரியும் மாயம்
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சரோஜாவை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சரோஜா மீது புகார் கொடுத்த பெண் அதிகாரி ராஜ மீனாட்சியும் திடீரென மாயமாகி விட்டதாகவும் ஈவிகேஎஸ் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications