வைகோவின் தொடர் விமர்சனங்கள்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாடல் !
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடந்த ஒரு வாரகாலமாக நிதானம் தவறி நடந்துகொள்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து தொகுதி பங்கீடு பற்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையிலான காங்கிரஸ் தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்தியது. பின்னர் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காங்கிரஸ் திமுக தொகுதிப் பங்கீடு உடன்பாடு இன்னும் ஓரிரு நாளில் இறுதி செய்யப்பட்டுவிடும் என்றார்.

அப்போது அவரிடம் கருணாநிதியை வைகோ ஒரு தலைபட்சமாகவும், ஒருமையிலும் விமர்சித்துள்ளாரே என்று கேட்டதற்கு, பதிலளித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ‘‘வைகோ திடீரென்று கடந்த ஒரு வார காலமாக தன்னை மறந்து, நிதானமின்றி இருக்கிறார்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் கருணாநிதி வாழ்ந்து வருகிறார். எல்லோராலும் மதிக்கக்கூடியவர். அவரை வைகோ ஒருமையில் பேசியிருப்பதாக கேள்விப்பட்டேன். அது உண்மை என்றால் வைகோ மீது நான் வைத்திருந்த கொஞ்சம், நெஞ்சம் மரியாதையும் எனக்கு போய்விட்டது'' என்றார்.












Click it and Unblock the Notifications