ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மாஜி டிஜிபி திலகவதி?
ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக மாஜி டிஜிபி திலகவதி நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
சென்னை: ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓபிஎஸ் அதிமுக வேட்பாளராக முன்னாள் டிஜிபி திலகவதி அறிவிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் அடுத்த மாதம் 12-ந் தேதி நடைபெறுகிறது. இத்தொகுதியில் பல முனை போட்டி நிலவுகிறது.

தீபா
ஏற்கனவே இத்தொகுதியில் போட்டியிடப் போவதாக எம்ஜிஆர்- அம்மா- தீபா பேரவை பொதுச்செயலர் தீபா தெரிவித்துள்ளார். சசிகலா அதிமுகவும் வேட்பாளரை நிறுத்த உள்ளது.

திமுக, பாஜக, நாம் தமிழர்
திமுகவில் வேட்பாளராக போட்டியிடுவோரிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட உள்ளன.

திருமாவளவன் போட்டி?
மக்கள் நலக் கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பொதுவேட்பாளராக நிறுத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே ஓபிஎஸ் அதிமுக இன்று ஆர்.கே.நகர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவிக்க உள்ளது.

ஓபிஎஸ் அதிமுக
தற்போதைய நிலையில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன், ஜேசிடி பிரபாகரன், ஆர்.கே.நகர் தொகுதியின் முதல் எம்.எல்.ஏவான மறைந்த நடிகர் ஐசரிவேலனின் மகள் டாக்டர் அழகு தமிழ்ச் செல்வி, ராஜேஷ் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன. அதேநேரத்தில் ஓபிஎஸ் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவதாக முன்னாள் டிஜிபி திலகவதி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications