For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முன்னாள் காவல்துறை ஐஜி மகன் வீட்டில் வருமான வரி ரெய்டு - வீடியோ

முன்னாள் ஐஜி அருளின் மகன் மைக்கல் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: வருமான வரித்துறையினர் முன்னாள் காவல்துறை ஐஜி அருள் மகன் மைக்கேல் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனால் போட் கிளப் பகுதியில் பரபரப்பு உண்டானது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தொடர்ந்து வருமான வரித்துறையினர் தமிழக அமைச்சர்கள், தொழில் அதிபர்கள், கான்ட்ராக்டர்கள் என வரிசையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Ex Inspector general Arul's son house been raided

இந்நிலையில், இன்று முன்னாள் காவல்துறை ஐஜி அருளின் மகன் மைக்கல் வீட்டில் வருமன வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். மைக்கல் சென்னை போட் கிளப் பகுதியில் வசிக்கிறார். இது பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை மிகக் குறைந்த விலைக்கு விற்று ஏமாற்றியதாக வருமான வரித்துறையினர் இவர் வீட்டில் சோதனை மேற்கொண்டுள்ளனர். மைக்கல் மீது சில வருடங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் அவரது மனைவி ஜெனிபர் அருள் வழக்குத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Income tax department raided in Ex. IG Arul's son Michael's house in chennai boat club area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X