கொல்கத்தா கொண்டு செல்லப்படுகிறார் கர்ணன்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கர்ணன் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
சென்னை: உச்ச நீதிமன்றத்தால் கைது நடவடிக்கைக்கு ஆளான கர்ணன் சென்னை விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற இன்னாள், முன்னாள் நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறியது குறித்து நேரில் விளக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிபதியாக இருந்த கர்ணனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஆனால் அவர் நேரில் ஆஜராகவும் இல்லை, விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கைதிலிருந்து விலக்களிக்க பல முறை மனு தாக்கல் செய்தும் உச்சநீதிமன்றம் அதை நிராகரித்தது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கர்ணன் தலைமறைவாக இருந்தார். அந்த நிலையிலேயே அவர் கடந்த 12-ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீஸார் தமிழக போலீஸாரின் உதவியை நாடினர். கோவையில் மலுமிச்சம்பட்டியில் உள்ள ரிசார்டில் தங்கியிருந்த அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலையத்துக்குள் இன்று காலை அழைத்து வரப்பட்ட கர்ணன் காலை 11 மணிக்கு கொல்கத்தா செல்லும் விமானத்தில் அழைத்து செல்லப்படுகிறார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications