மாணவி நிவேதிதாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம் - முன்னாள் மேயர் மா சுப்ரமணியன்
சென்னை: சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஏழை மாணவி நிவேதிதாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம் என முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பத்தாங்காடு கிராமத்தில் உள்ள கூலித் தொழிலாளி ராஜேந்திரன் - திலகவதி மகளான நிவேதிதா, ப்ளஸ்டூவில் அதிக மதிப்பெண்கள் பெற்று பிஇ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார்.
மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென வயிற்று வலி. விடுப்பில் ஊருக்குத் திரும்பிய மாணவி பல மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றும் உடல் குணமடையில்லை. இப்போது சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உதவியுடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

அவரது நிலை குறித்து ஒன்இந்தியா தமிழில் செய்தி வெளியானததைத் தொடர்ந்து, அமீரகத்தில் வசிக்கும் திமுகவினர் நிதியுதவி அளித்துள்ளனர். அந்தத் தொகையை நிவேதிதாவின் தந்தையிடம் நேற்று வழங்கினார் சென்னை முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன்.
இதுகுறித்து மா சுப்பிரமணியத்திடம் ஒன்இந்தியா சார்பில் பேசினோம்.
அவர் கூறுகையில், "இந்தப் பெண்ணின் நிலை குறித்து கேள்விப் பட்டதும், அமீரகத்தில் வாழும் திமுகவினர் நிதி அனுப்பியிருந்தனர்.
நேற்று நான்தான் நேரில் போய் அந்தத் தொகையைக் கொடுத்தேன். அரசு மருத்துவமனை என்பதால் செலவு குறித்து பிரச்சினை இல்லை. அப்படியே ஏதாவது தேவை என்றாலும் உதவி செய்வதாக உறுதியளித்திருக்கிறேன்.

அந்தப் பெண்ணின் கல்லூரியில் இதுபற்றி ஏதாவது பேச வேண்டும் அல்லது பணம் செலுத்த வேண்டும் என்றாலும் செய்யத் தயாராக உள்ளோம்.
குடும்பத்தினருக்கு உதவி தேவைப்பட்டாலும் கேட்கச் சொல்லியிருக்கிறேன். எனது தொலைபேசி எண்ணை அவர்களிடம் கொடுத்து, எந்த நேரத்திலும் உதவிக்கு அழைக்கக் கூறியிருக்கிறேன். தேவைப்பட்டால் கழகத்தின் சார்பிலும் உதவத் தயாராக உள்ளோம்," என்றார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications