மாஜி அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மரணம்... ஜெ. வின் முதலாவது ஆட்சியில் அமைச்சராக இருந்தவர்!
சென்னை: முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு சென்னையில் இன்று மாலை மரணமடைந்தார்.
திமுக விவசாய தொழிலாளர் அணி செயலாளராக இருந்து வந்தார் அழகு திருநாவுக்கரசு. ஆனால் இவர் முன்பு அதிமுகவில் இருந்தவர் ஆவார்.
திருநாவுக்கரசு உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். இவர், கடந்த 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரையிலான ஜெயலலிதாவின் முதலாவது ஆட்சிக்காலத்தின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர்.

சென்னையில் நேரு ஸ்டேடியம் கட்டியதில் முக்கிய பங்கு வகித்தவர். மேலும் திமுக ஆட்சிக்காலத்தில் ஜெயலலிதாவுடன் சேர்த்து இவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டது. அதில் முக்கியமானது ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடி அளவிலான காசோலைகள் வெளிநாட்டிலிருந்து வந்தது தொடர்பானதாகும்.
இந்த வழக்கில் ஜெயலலிதா தவிர செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். பின்னர் இந்த வழக்கிலிருந்து அனைவரும் விடுதலையாகி விட்டனர்.
திருநாவுக்கரசின் உடல், அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம், எடமேலையூருக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
எம்.ஜி.ஆர். அதிமுகவை தொடங்கியபோது அதில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட அதிமுக செயலாளராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பணியாற்றிவர்.
கடந்த 2010ம் ஆண்டு இவர் திமுக தலைவர் கருணாநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications