நள்ளிரவில் 2-வது மனைவியை சுட்டுக் கொல்ல முயன்ற மாஜி தி.மு.க. எம்.எல்.ஏ.... சென்னையில் பரபரப்பு
சென்னை: 2-வது மனைவியை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் முயற்சித்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அசோகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அசோகன் தி.மு.க.வில் இருந்து விலகி தற்போது அ.தி.மு.க.வில் இருக்கிறார். 2-வது மனைவி ஹேமாவுடன் சென்னை பட்டினப்பாக்கத்தில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன் ஹேமா நள்ளிரவில் பட்டினப்பாக்கம் போலீசில் ஓடிவந்து ஒரு புகார் கொடுத்தார்.

அதில் தமக்கும் கணவர் அசோகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அப்போது தம்மை அசோகர் 2 முறை கைத்துப்பாக்கியால் சுட்டதாகவும் ஹேமா தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அசோகன் மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் முடிவில் 2-வது மனைவி ஹேமா மீது அசோகன் 2 முறை துப்பாக்கியால் சுட்டதாகவும் இதில் அவர் உயிர் தப்பியதாகவும் தெரியவந்தது.
அத்துடன் அசோகன் வீட்டில் துப்பாக்கிச் சூட்டு சப்தம் கேட்டதை அப்பகுதி குடியிருப்புவாசிகளும் உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து அசோகன் மீது கொலைமுயற்சி வழக்கை பட்டினப்பாக்கம் போலீசார் நேற்று பதிவு செய்தனர்.
அவரது கைத்துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அசோகன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக் கூடும் என கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications