கோவில்பட்டியில் மாஜி எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக மீட்பு!
நெல்லை: கோவில்பட்டியில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் காரில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பட்டி புதிய பேருந்து நிலையில் அருகே கேட்பாரற்ற நிலையில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் சடலமாக கிடந்தார்.

அவரது உடலையும் அங்கிருந்த துப்பாக்கியையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ராஜேந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது சுட்டுப் படுகொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1995ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்தவர் ராஜேந்திரன். பின்னர் அவர் தி.மு.க.,வில் இணைந்தார்.
தற்போது அவர் துாத்துக்குடி தி.மு.க. தெற்கு மாவட்ட தலைவர் பதவியில் உள்ளார்.












Click it and Unblock the Notifications