"விட்ருங்க".. கோடம்பாக்கம் டூ தி.நகர்..வாகன ஓட்டிகளுக்கு "இங்கே" தான் பார்க்கிங்: சென்னை மாநகராட்சி
சென்னை: வாகன ஓட்டிகளுக்கு மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை, விரைவில் சென்னை மாநகராட்சி வெளியிட போகிறது.. அதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
அரசு போக்குவரத்துத்துறையின் புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் 3.13 கோடி வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில் அதிகபட்ச வாகனங்கள் சென்னையில் மட்டுமே இயங்குகின்றன.
இதனால் மாநகர சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தினம் தினம் ஏற்படுகிறது... இந்த வாகனங்களை எல்லாம் நிறுத்துவதற்குப் போதுமான இடவசதியும் கிடையாது.. இதனால் பொதுமக்கள் நிறைய சிரமத்தை சந்திக்கிறார்கள்.

பார்க்கிங்: பெரும்பாலும், தங்கள் வீடு, அலுவலகங்களுக்கு வெளியே நிறுத்த வேண்டிய நிலைமையே உள்ளது.. இப்படி சாலையோரங்களில் நிற்கும் வாகனங்கள் பிற வாகன ஓட்டிகளுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. அதனால், இதற்குத் தீர்வுகாணும் வகையில் சாலையோரங்களில் பார்க்கிங்களை ஏற்படுத்துவதற்கு மாநகராட்சி ஒரு சூப்பர் முடிவு எடுத்திருக்கிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன... தி.நகர், திருவல்லிக்கேணி, அடையாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்களில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளது.
பயன்பாடு கட்டிடம்: இப்போதைக்கு, பார்க்கிங் கட்டணம் மூலம் தினமும் ரூ.1.5 லட்சம் வரை வாடகை கட்டணம் மாநகராட்சிக்கு கிடைத்து வரும் நிலையில், பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது. இதில் கோடம்பாக்கம், வளசரவாக்கம் மண்டல அலுவலகங்கள், சி.பி.ராமசாமி சாலை வளாகம், தி.நகரில் உள்ள நாயர் சாலை வளாகம் உள்ளிட்டவையும் அடக்கம்.

கட்டணங்கள்: இது குறித்து அதிகாரிகள் சொல்லும்போது, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கூடுதலாக வாகனங்களை நிறுத்தும் வசதி உள்ள இடங்கள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் மட்டும் தினமும் ரூ.1.2 லட்சம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலாகிறது. இதே போல் தெருக்களில் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் தேவை குறித்து விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இப்போது 5 ஆயிரம் இடங்கள் உள்ளது... ஆய்வுக்கு பிறகு, இது 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை அதிகரிக்கும்
ஒவ்வொரு நிறுத்தத்திலும் நவீன தொழிநுட்பத்துடன்கூடிய சென்சார் கருவி பொருத்தப்படும். இது உள்ளே நுழையும் வாகனத்தின் பதிவு எண்ணை உடனடியாக சேகரித்து ரசீது வழங்கும் கட்டண மீட்டருக்கு அனுப்பிவைக்கும். பார்க்கிங்கில் நிறுத்தப்படும் வாகனத்துக்கு காவல்துறையுடன் இணைந்து உரிய பாதுகாப்பு வழங்கப்படும்" என்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications